பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை-வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல், அத்தியாவசிய உணவு பொருட்களை ஒரே தவணையில் வழங்குமாறு, ரேஷன் கடை ஊழியர்களை, கூட்டுறவு மற்றும் உணவு துறை அறிவுறுத்தி உள்ளது.ரேஷன் ஊழியர்கள், முதல் வாரத்தில் வரும் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்குவதாகவும்; மற்ற நாட்களில் வருவோருக்கு, ஏதேனும் பொருட்கள் இல்லை என்று கூறி திருப்பி

சென்னை-வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல், அத்தியாவசிய உணவு பொருட்களை ஒரே தவணையில் வழங்குமாறு, ரேஷன் கடை ஊழியர்களை, கூட்டுறவு மற்றும் உணவு துறை அறிவுறுத்தி உள்ளது.

ரேஷன் ஊழியர்கள், முதல் வாரத்தில் வரும் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்குவதாகவும்; மற்ற நாட்களில் வருவோருக்கு, ஏதேனும் பொருட்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் எழுகின்றன.இம்மாத இறுதியில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்குகிறது.

எனவே, கடைக்கு வரும் கார்டுதாரர்களை எக்காரணத்தை முன்னிட்டும் அலைக்கழிக்காமல், ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குமாறு ஊழியர்களை, கூட்டுறவு மற்றும் உணவு துறை அறிவுறுத்தியுள்ளது.இதற்காக, ரேஷன் கடைகளுக்கு முழு அளவுக்கு உணவு பொருட்களை 'சப்ளை' செய்யுமாறு, வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X