பொது செய்தி

தமிழ்நாடு

8 மாதங்களுக்கு பிறகு குறைதீர் கூட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எட்டு மாதங்களுக்கு பின் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.2020 மார்ச் முதல் கொரோனா காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடக்காமல் இருந்தது. 2021 ஜனவரி முதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பால் பிப். 22ல் கடைசி குறைதீர் கூட்டம் நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே முதல் செப்டம்பர் வரை குறைதீர் கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எட்டு மாதங்களுக்கு பின் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

2020 மார்ச் முதல் கொரோனா காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடக்காமல் இருந்தது. 2021 ஜனவரி முதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பால் பிப். 22ல் கடைசி குறைதீர் கூட்டம் நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே முதல் செப்டம்பர் வரை குறைதீர் கூட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 428 மனுக்கள் பெறப்பட்டன. சப் கலெக்டர் பிருத்விராஜ், திட்ட இயக்குனர் திலகவதி, சமுக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணவேணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X