பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் தண்ணீர் தேங்காததால் பொய்த்த விவசாயம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மானாமதுரை : கீழமேல்குடி ஊராட்சிக்குட்பட்ட கண்மாயில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தேங்காததால் விவசாயம் பொய்த்து போனது.மானாமதுரை நகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது கீழமேல்குடி ஊராட்சி.இந்த ஊராட்சியில் கீழமேல்குடி.தெக்கூர்,ஆனந்தவல்லி அம்மன் நகர்,ராஜ் நகர்,பெமினா நகர்,பாரதி நகர்,ஆண்டாள் கார்டன்,பாலாஜி நகர்,சீனிவாசா நகர்,செந்தமிழ் நகர் பகுதிகளில் 2500 க்கும்

மானாமதுரை : கீழமேல்குடி ஊராட்சிக்குட்பட்ட கண்மாயில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தேங்காததால் விவசாயம் பொய்த்து போனது.

மானாமதுரை நகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது கீழமேல்குடி ஊராட்சி.இந்த ஊராட்சியில் கீழமேல்குடி.தெக்கூர்,ஆனந்தவல்லி அம்மன் நகர்,ராஜ் நகர்,பெமினா நகர்,பாரதி நகர்,ஆண்டாள் கார்டன்,பாலாஜி நகர்,சீனிவாசா நகர்,செந்தமிழ் நகர் பகுதிகளில் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.கீழமேல்குடி,தெக்கூர் கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்த நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கீழமேல்குடி கண்மாயில் தண்ணீர் தேங்காததால் 500 ஏக்கர் விவசாயம் பொய்த்து போனது.

விளை நிலங்கள் தற்போது வீட்டு மனைகளாக மாறிவிட்டது.மானாமதுரை நகராட்சியானதை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள ராஜ் நகர்,செந்தமிழ் நகர் பகுதிகளை மட்டும் ஊராட்சியோடு சேர்த்து விட்டு மற்ற பகுதிகளை நகராட்சியோடு இணைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.நகரை ஒட்டிய விரிவாக்க பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு,சாலை வசதி இல்லாமல் மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.மழை காலங்களில் அந்த பகுதியில் டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.தெக்கூரில் உள்ள காலனி வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.மக்கள் அச்சத்தோடு வசிக்கின்றனர். போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லாததால் துப்புரவு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வராத கண்மாய் ஆர்.தர்மாராமு, ஊராட்சி தலைவர் கூறுகையில்,கீழமேல்குடி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வந்தது. வைகை ஆற்றில் இருந்து வரும் கால்வாய் துார்வாரப்படாமல் இருந்ததால் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் கண்மாயை மறைக்கும் அளவிற்கு தற்போது கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏராளமான விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு தற்போது அதில் குடியிருப்புகள் உருவாகி உள்ளன. மீதமுள்ள விளைநிலத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டாவது வைகையில் தண்ணீர் திறக்கப்படும் போது கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புகளில் ரோடு,தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்

.பாழடைந்த தொகுப்பு வீடுகள்

கே.அர்ச்சுணன், ஊராட்சி துணைத்தலைவர் கூறுகையில்,கீழமேல்குடி ஊராட்சி நகரை ஒட்டி இருப்பதால் நகரோடு சேர்ந்து புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புகளை மானாமதுரை நகராட்சியோடு இணைக்க ஊராட்சி நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.தெக்கூர் பகுதியில் உள்ள காலனி வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் அதில் வசிக்கும் மக்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்,அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புது வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X