சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடையில் குளித்த மெக்கானிக் மாயம்; 20 மணி நேரமாக தேடிய தீயணைப்பு துறை

Added : அக் 05, 2021
Share
Advertisement
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் தலைமலையான்கோயில் ஓடையில் உறவினர்களுடன் குளித்த சிவகாசி ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் மாரீஸ்வரன் 31, காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 20 மணி நேரமாக தேடி வருகின்றனர்.நேற்று முன்தினம் அழகாபுரி சகோதரி வீட்டிற்கு உறவினர்கள் மாரிமுத்து, சுரேஷ்குமார்,

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் தலைமலையான்கோயில் ஓடையில் உறவினர்களுடன் குளித்த சிவகாசி ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் மாரீஸ்வரன் 31, காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 20 மணி நேரமாக தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அழகாபுரி சகோதரி வீட்டிற்கு உறவினர்கள் மாரிமுத்து, சுரேஷ்குமார், கார்த்திக், பழனிச்சாமி ஆகியோருடன் மாரீஸ்வரன் சென்றார். மாலை 5:00 மணிக்கு மேல் தலைமலையான் கோயில் ஓடையில் அனைவரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளம் வந்ததில் மாரீஸ்வரன் இழுத்து செல்லப்பட்டார்.

வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை விருதுநகர், சிவகாசி தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு நீர்வரத்து ஓடை, இலந்தைகுளம் கண்மாய் பகுதியில் தேடினர். 20 மணி நேரம் தேடியும் நேற்றிரவு 7:00 மணி வரை மாரீஸ்வரன் மீட்கப்படவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X