சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வெளியாத்துாரைச் சேர்ந்த முதியவர் அறிவுக்கரசு, தங்கையுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.தற்கொலை முயற்சி குறித்து போலீசில் அறிவுக்கரசு கூறியதாவது: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கிறேன். நான், எனது மனைவி கண்ணகி, தங்கை ஆகியோர் வீட்டிற்கு வரக்கூடாது என திருக்கோஷ்டியூர் போலீசில் எனது தந்தை

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வெளியாத்துாரைச் சேர்ந்த முதியவர் அறிவுக்கரசு, தங்கையுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

தற்கொலை முயற்சி குறித்து போலீசில் அறிவுக்கரசு கூறியதாவது: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கிறேன். நான், எனது மனைவி கண்ணகி, தங்கை ஆகியோர் வீட்டிற்கு வரக்கூடாது என திருக்கோஷ்டியூர் போலீசில் எனது தந்தை கணேசன் எழுதிக்கொடுத்து விட்டு எங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டார். சில நாட்கள் கழித்து மருமகள் கண்ணகியை மட்டும் கணேசன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.2014ல் எனது தாயார் சிரோன்மணி இறந்து விட்டார்.

இந்த தகவலை எனக்கு தெரிவிக்கவில்லை. தகவல் தெரிந்து தங்கையுடன் சென்று தாய்க்கு இறுதி சடங்கு செய்தேன். இறந்த எனது தாயார் சிரோன்மணியின் ஓய்வூதிய தொகையை தந்தை கணேசன் எடுத்துக் கொண்டார். தாயாரின் வைப்புத்தொகை 6.30 லட்சத்தை எடுக்க தேவகோட்டை நீதிமன்றத்தில் தந்தை வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்றத்தில் பணம் எடுக்க நானும், தங்கையும் சம்மதம் தெரிவிக்கவில்லை. போலி ஆவணங்கள் தயாரித்து வைப்புத்தொகை முழுவதையும் எனது தந்தை எடுத்துள்ளார். வாழ வழி தெரியாததால் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க நானும். தங்கையும் முயற்சித்தோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X