சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பெண் உடல்நிலை பாதிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலத்தில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரலேகா, 29; இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சின்னசேலம் : சின்னசேலத்தில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரலேகா, 29; இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கருக்கலைப்பு செய்ய கடந்த வாரம், சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 30ம் தேதி சிகிச்சை மேற்கொண்டனர்.இதில், ரத்தப்போக்கு அதிகளவில் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.அங்கு, சிகிச்சை மேற்கொண்டும் முன்னேற்றம் இல்லாததால் 2ம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கும் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கனவே சிகிச்சை அளித்த சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.இதனால், ஆம்புலன்சில் வென்டிலேட்டர் உதவியுடன், மீண்டும் சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை 4:00 மணியவில் கொண்டு வந்தனர். தவறான சிகிச்சை அளித்த டாக்டரை கைது செய்ய வேண்டும் என உறவினர்களும், பொதுமக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு, வென்டிலேட்டருடன் சந்திரலேகா சிகிச்சையில் இருந்த ஆம்புலன்ஸ்சை சின்னசேலம் - சேலம் மெயின் ரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.எஸ்.பி., ஜியாவுல்ஹக், ஏ.டி.எ.ஸ்., ஜவகர்லால், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் சந்திசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இரவு 9:30 மணி வரை நீடித்த பேச்சுவார்த்தையில், விசாரணை நடத்தி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், இரவு 9:40 மணியளவில் டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவின் பேரில், தாசில்தார் அனந்தசயனன் முன்னிலையில் வி.ஏ.ஓ., நாகராஜ் மருத்துமனைக்கு சீல் வைத்தார். அதனைத் தொடர்ந்து 9:45 மணிக்கு மறியலை கைவிட்டனர்.பின்னர், 9:50 மணிக்கு சந்திரலேகாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X