சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறான அறுவை சிகிச்சையால் இறப்பு: கலெக்டரிடம் புகார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பரமக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் நடந்த தவறால், தனது மனைவி இறந்துவிட்டதாக பிறந்து 16 நாளான குழந்தையுடன் கணவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.பரமக்குடி அருகே மடந்தையைச் சேர்ந்த சத்தியராஜ் 27, அவரது மனைவி கனிமொழி 22, திருமணமாகி 2 வயதில் ஒருமகள் உள்ளார். இந்தநிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக பரமக்குடி அரசு
 தவறான அறுவை சிகிச்சையால் இறப்பு: கலெக்டரிடம் புகார்

ராமநாதபுரம் : பரமக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் நடந்த தவறால், தனது மனைவி இறந்துவிட்டதாக பிறந்து 16 நாளான குழந்தையுடன் கணவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

பரமக்குடி அருகே மடந்தையைச் சேர்ந்த சத்தியராஜ் 27, அவரது மனைவி கனிமொழி 22, திருமணமாகி 2 வயதில் ஒருமகள் உள்ளார். இந்தநிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி அனுமதிக்கப்பட்டு செப். 17ல் ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் கனிமொழி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துஉள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் கனிமொழி இறந்தார்.

பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை அனுப்பியுள்ளனர். தவறான அறுவை சிகிச்சையால் தான் மனைவி இறந்துவிட்டார். ஆகையால் இரு குழந்தைகள் நலன் கருதி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம்சத்தியராஜ் அவரது உறவினர்களுடன் மனு அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X