பொது செய்தி

இந்தியா

பிரியங்கா கைதை கண்டித்து நடிகை நக்மா சாலை மறியல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கைது செய்ததை கண்டித்து, புதுச்சேரியில் நடிகை நக்மா மறியலில் ஈடுபட்டார்.உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச் சென்ற, காங்., அகில இந்திய பொதுச் செயலர் பிரியங்காவை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைக் கண்டித்து, காங்., கட்சியினர் நேற்று நாடு முழுவதும் மறியலில்
 பிரியங்கா கைதை கண்டித்து நடிகை நக்மா சாலை மறியல்

புதுச்சேரி : காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கைது செய்ததை கண்டித்து, புதுச்சேரியில் நடிகை நக்மா மறியலில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச் சென்ற, காங்., அகில இந்திய பொதுச் செயலர் பிரியங்காவை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைக் கண்டித்து, காங்., கட்சியினர் நேற்று நாடு முழுவதும் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக மகளிர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலரான நடிகை நக்மா நேற்று மாலை 3:30 மணிக்கு புதுச்சேரி வருகை தந்தார்.நக்மா தலைமையில் மகளிர் காங்., கட்சியினர் மாலை 5:00 மணிக்கு, ராஜிவ் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரியங்காவை கைது செய்ததை கண்டித்தும், உ.பி., அரசை கண்டித்து கோஷமிட்டனர். மறியல் போராட்டம் மாலை 5:20 வரை நீடித்தது. இதனால், 20 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மறியலை தொடர்ந்து, நக்மா அளித்த பேட்டி:கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பிரியங்காவை, உ.பி., அரசு சட்ட விரோதமாக கைது செய்துள்ளது. விவசாயிகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து பேச மோடி அரசு முன்வரவில்லை.போராடும் விவசாயிகளை, உ.பி., அரசு ஒடுக்க முயல்கிறது. அங்கு நடந்த கலவரத்திற்கும், விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் பொறுப்பேற்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். பிரியங்காவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நமச்சிவாயம் - நக்மாநேருக்கு நேர் சந்திப்புராஜிவ் சிக்னலில் மறியலில் ஈடுபட்ட மகளிர் காங்., அகில இந்திய பொதுச் செயலர் நக்மா, அருகில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு, நிர்வாகிகளுடன் சென்றார். அப்போது, ஓட்டலில் இருந்து வெளியே வந்த பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம், நக்மா மற்றும் மகளிர் காங்., நிர்வாகிகளை பார்த்து, கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.பதிலுக்கு, நக்மா உள்ளிட்ட மகளிர் காங்., நிர்வாகிகளும் கைகூப்பி வணக்கம் கூறியபடி, அமைச்சரை சூழ முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து, அமைச்சரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X