சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் பெட்டியில் ரூ.7.50 லட்சம் அபேஸ்.

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மரக்காணம் ரோடு விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சேகர், 48; ஆட்டோ கன்சல்டன்சி நடத்தி வருகிறார். இவர், பழைய டிப்பர் லாரி வாங்க முடிவு செய்தார். நேற்று காலை இரண்டு தனியார் வங்கி மற்றும் தனி நபரிடம் பெற்ற 7.50 லட்சம் ரூபாயை ஹீரோ டீலக்ஸ் பைக் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றார். மாலை 3:30 மணியளவில் சேடன்குட்டை என்ற இடத்தில் உள்ள லாரி

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மரக்காணம் ரோடு விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சேகர், 48; ஆட்டோ கன்சல்டன்சி நடத்தி வருகிறார்.

இவர், பழைய டிப்பர் லாரி வாங்க முடிவு செய்தார். நேற்று காலை இரண்டு தனியார் வங்கி மற்றும் தனி நபரிடம் பெற்ற 7.50 லட்சம் ரூபாயை ஹீரோ டீலக்ஸ் பைக் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றார். மாலை 3:30 மணியளவில் சேடன்குட்டை என்ற இடத்தில் உள்ள லாரி பெயிண்டிங் மற்றும் ஒர்க் ஷாப் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் பெட்டி உடைக்கப்பட்டு 7.50 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.திண்டிவனம் போலீசில் சேகர் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X