தனுஷ்கோடி பள்ளியில் மழைநீர் புகுந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி பள்ளியில் மழைநீர் புகுந்தது

Added : அக் 05, 2021
Share
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் கணினி, பிரிண்டர், ஆவணங்கள் நனைந்து வீணானது.தனுஷ்கோடி அரசு பள்ளியில் தற்போது 66 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வீசும் புயல், சூறாவளியில் மாணவர்களை பாதுகாக்க பள்ளிக்கு நிரந்த கான்கிரீட் கட்டடம் அமைக்காமல், 2012ல் இரும்பு தகட்டில் கட்டடம்அமைத்தனர். இதுவும் உப்பு காற்றில் அரித்து தற்போது வகுப்பறை கூரைகள்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் கணினி, பிரிண்டர், ஆவணங்கள் நனைந்து வீணானது.

தனுஷ்கோடி அரசு பள்ளியில் தற்போது 66 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வீசும் புயல், சூறாவளியில் மாணவர்களை பாதுகாக்க பள்ளிக்கு நிரந்த கான்கிரீட் கட்டடம் அமைக்காமல், 2012ல் இரும்பு தகட்டில் கட்டடம்அமைத்தனர். இதுவும் உப்பு காற்றில் அரித்து தற்போது வகுப்பறை கூரைகள் எலும்பு கூடாய் காட்சியளித்தது. இதனை அகற்றி பள்ளியைபுதுப்பிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

நேற்று தனுஷ்கோடியில் பெய்த மழையால் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி கணினி, பிரிண்டர்,பீரோவில் இருந்த மாணவர் ரிக்கார்டுகள், செயல்முறை விளக்க பாட புத்தகங்கள் நனைந்தது. வகுப்பறையில் தேங்கிய தண்ணீரை பள்ளி ஆசிரியர்கள் வெளியேற்றினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X