தனியார் விடுதியை மூட கிராம மக்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் விடுதியை மூட கிராம மக்கள் வலியுறுத்தல்

Added : அக் 05, 2021
Share
ராமநாதபுரம் : மண்டபம் அருகே தோணிக்கரை, தோப்புக்காடு பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி சட்ட விரோதமாக செயல்படுகிறது. விடுதியை மூடவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமேஸ்வம் கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் தோணிக்கரை, தோப்புக்காடு பகுதி மீனவர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்துஉள்ளனர். இதில்,

ராமநாதபுரம் : மண்டபம் அருகே தோணிக்கரை, தோப்புக்காடு பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி சட்ட விரோதமாக செயல்படுகிறது. விடுதியை மூடவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வம் கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் தோணிக்கரை, தோப்புக்காடு பகுதி மீனவர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்துஉள்ளனர். இதில், தோப்புக்காடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட தனியார்கேளிக்கை விடுதி கடந்த ஜனவரியில் மூடி சீல் வைக்கப்பட்டது. தற்போது அரசின் அனுமதியின்றி மீண்டும் தொடர்ந்து செயல்படுகிறது. இதுதொடர்பாக போலீசார், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.தனியார் கேளிக்கை விடுதியை மூட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X