காங்., தலைவர் சிவகுமார் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
மங்களூரு : காங்., தலைவர் சிவகுமார், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது, மின்சார பிரச்னை குறித்து விவரிக்க அழைப்பு விடுத்த நபரை கைது செய்ய வைத்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சுள்யா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் அரசில், 2016ல் சிவகுமார் மின் துறை அமைச்சராக இருந்தார்.அதே ஆண்டு பிப்ரவரி 28ல் தட்சிண கன்னடா சுள்யாவின் பெள்ளாரேவில் வசிக்கும் சாய்கிரிதர் ராய்

மங்களூரு : காங்., தலைவர் சிவகுமார், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது, மின்சார பிரச்னை குறித்து விவரிக்க அழைப்பு விடுத்த நபரை கைது செய்ய வைத்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சுள்யா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் அரசில், 2016ல் சிவகுமார் மின் துறை அமைச்சராக இருந்தார்.அதே ஆண்டு பிப்ரவரி 28ல் தட்சிண கன்னடா சுள்யாவின் பெள்ளாரேவில் வசிக்கும் சாய்கிரிதர் ராய் என்பவர், தங்கள் ஊரின் மின் பிரச்னை குறித்து சிவகுமாரிடம் போனில் விவரித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பரஸ்பரம் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அதன்பின் சிவகுமார், 'மெஸ்காம்' நிர்வாக இயக்குனர் மூலம், சாயிகிரிதர் ராய் மீது சுள்யா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அன்றிரவே போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். ராய் வீட்டின் கூரையை பெயர்த்து உள்ளே நுழைந்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இவ்விஷயம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மின் பிரச்னையை கூறிய நபரை தன் செல்வாக்கை பயன்படுத்தி கைது செய்ய வைத்ததை, பா.ஜ.,வினர் உட்பட பலரும் கண்டித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, சுள்யா நீதிமன்றத்தில் நடக்கிறது. சிவகுமாரை விசாரணைக்கு வரும்படி பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டது;அவர் ஆஜராகவில்லை. செப்டம்பர் 9 மற்றும் 29லும், ஆஜராகும்படி, 'சம்மன்' வந்தது. அப்போதும் ஏதோ காரணம் கூறி நழுவிக்கொண்டார். எனவே அதிருப்தியடைந்த நீதிமன்றம், இன்றைய தினம் நடக்கும் விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அவராக வராவிட்டால், அவரை நீதிமன்றத்துக்கு, அழைத்து வரும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X