பொது செய்தி

இந்தியா

போலீஸ் அதிகாரிகள் பொது இடத்தில் கூட்டம்; கமிஷனர் சந்திரகுப்தா

Added : அக் 05, 2021
Share
Advertisement
மைசூரு : மைசூரு போலீஸ் நிலையங்கள் மக்களுக்கு நெருக்கமாகி வருகிறது. இனி போலீஸ் அதிகாரிகள், ஊழியர்களின் கூட்டம் பொது இடங்களில் நடக்கும். இது குறித்து மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நேற்று கூறியதாவது:இதுவரை போலீஸ் நிலையங்களுக்குள் நடந்து வந்த, போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டம் இனி போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பொது இடங்களில் நடக்கும். இதனால் பாதுகாப்புக்கு

மைசூரு : மைசூரு போலீஸ் நிலையங்கள் மக்களுக்கு நெருக்கமாகி வருகிறது. இனி போலீஸ் அதிகாரிகள், ஊழியர்களின் கூட்டம் பொது இடங்களில் நடக்கும். இது குறித்து மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நேற்று கூறியதாவது:

இதுவரை போலீஸ் நிலையங்களுக்குள் நடந்து வந்த, போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டம் இனி போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பொது இடங்களில் நடக்கும். இதனால் பாதுகாப்புக்கு போலீசார் உள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும். பொது இடங்களில் போலீசார் காணப்படுவதாலும், பகிரங்கமாக கூட்டம் நடத்துவதாலும், ரோந்துக்கு உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளால், குற்றச்சம்பவங்கள் கட்டுக்குள் வரும். போலீசார் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். தினமும் காலை 8:30 மணிக்கு பல்வேறு பொது இடங்களில் கூட்டம் நடக்கும். அதுமட்டுமின்றி, போலீசார் அந்தந்த இடங்களுக்கு சென்று திடீர் சோதனையிடுகின்றனர்.
மைசூரு நகரின் ஓட்டல்கள், லாட்ஜ், சுற்றுலா விடுதிகள், வெளிமாநிலங்கள், நாடுகளிலிருந்து மைசூருக்கு வந்து தங்கியுள்ள வாடகை வீடுகளில் திடீர் சோதனை நடக்கிறது. பொது இடங்களில் அதிகமாக நடமாடுவதன் மூலம், குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்காணிப்பர். நகரின் முக்கியமான சதுக்கங்கள், பதற்ற பகுதிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்படுகின்றனர்.போலீஸ் நிலையத்தில் அவர்களின் பணித்திறன், நடவடிக்கை பொது மக்களுக்கும் தெரிய வேண்டும். இதை மனதில் கொண்டே பொது இடங்களில் கூட்டம் நடத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X