பொது செய்தி

இந்தியா

தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மங்களூரு : பாரம்பரியம் குறையாமல் மங்களூரு தசரா விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அடுத்த குத்ரோலியில் கோகர்ணா நாதா கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தசரா விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் வரும் 7 முதல் 16 வரை தசரா விழா வைபவத்துடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. முதல்
தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்

மங்களூரு : பாரம்பரியம் குறையாமல் மங்களூரு தசரா விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அடுத்த குத்ரோலியில் கோகர்ணா நாதா கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தசரா விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் வரும் 7 முதல் 16 வரை தசரா விழா வைபவத்துடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. முதல் நாளான 7ல், காலை 9:00 மணிக்கு குரு பிரார்த்தனையுடன் விழா ஆரம்பிக்கப்படுகிறது.

கொரோனாவால் தசரா ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி ஆன்மிக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடக்கும்.வரும் 15ல் மஹா பூஜை நடத்தி இரவு 8:00 மணிக்கு சாரதா தேவி சிலை புனித குளத்தில் கரைக்கப்படும். அரசின் உத்தரவுப்படி கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவுள்ளன.தினமும் அன்னதானத்திற்கு பதில் பாக்கெட்கள் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மங்களூரு தசரா விழாவை ஒட்டி கோவிலை சுற்றியுள்ள, 7 கி.மீ.,க்கு ராஜ வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X