சம்பந்திகள் இடையே தகராறு; ஒருவர் கொலை

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஹென்னுார் : குடும்ப பிரச்னையால் சம்பந்திகள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார்.பெங்களூரு ஹென்னுார் அருகில் கெத்தலஹள்ளி சித்தார்த் நகரில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் முகமது மெஹதுத், 48. இவர் கெத்தலஹள்ளியில் கார்களை ரிப்பேர் செய்யும் பணிமனை நடத்துகிறார். எட்டு மாதங்களுக்கு முன் இவரது மகனுக்கும், நஜீர் அகமது மகளுக்கும் திருமணம் நடந்தது. குடும்ப

ஹென்னுார் : குடும்ப பிரச்னையால் சம்பந்திகள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார்.

பெங்களூரு ஹென்னுார் அருகில் கெத்தலஹள்ளி சித்தார்த் நகரில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் முகமது மெஹதுத், 48. இவர் கெத்தலஹள்ளியில் கார்களை ரிப்பேர் செய்யும் பணிமனை நடத்துகிறார். எட்டு மாதங்களுக்கு முன் இவரது மகனுக்கும், நஜீர் அகமது மகளுக்கும் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னையால் சம்பந்திகள் குடும்பத்திற்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.நேற்று முன் தினம் இரவு, 8:30 மணிக்கு தன் மகன் தையல் கடை முன் முகமது மெஹதுத் அமர்ந்திருந்தார். அப்போது சம்பந்தி நஜீர் அகமது அங்கு வந்தார். வழக்கம் போல இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த அவர் உருட்டுக்கட்டையால் முகமது மெஹதுத் தலையில் ஓங்கி அடித்தார். அதே இடத்தில் அவர் உயிரிழந்தார். ஹென்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X