பொது செய்தி

இந்தியா

விலை உயர்ந்த சிப்களை திருடி காயலான் கடையில் விற்பனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
பீன்யா : மொபைல் போன் டவர்களில் விலை மதிப்பு மிக்க 'சிப்'களை திருடிய, காயலான் கடையில் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரில் உள்ள பிரபல மொபைல் போன் நெட்வொர்க் டவர்களில் அடிக்கடி 'சிப்' காணாமல் போவதாக பீன்யா போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது.இது குறித்து விசாரித்த போலீசாருக்கு வாலிபர் ஒருவர், பழைய பொருட்களை விற்கும் காயலான் கடையில் எலக்ட்ரிக் பொருட்களை

பீன்யா : மொபைல் போன் டவர்களில் விலை மதிப்பு மிக்க 'சிப்'களை திருடிய, காயலான் கடையில் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் உள்ள பிரபல மொபைல் போன் நெட்வொர்க் டவர்களில் அடிக்கடி 'சிப்' காணாமல் போவதாக பீன்யா போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது.இது குறித்து விசாரித்த போலீசாருக்கு வாலிபர் ஒருவர், பழைய பொருட்களை விற்கும் காயலான் கடையில் எலக்ட்ரிக் பொருட்களை விற்பனை செயவதாக தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.

அவரது பெயர் கங்காதர், 30. இவர் பிரபல டெலிகாம் நெட் வொர்க் நிறுவனத்தில், மொபைல் டவர்கள் பராமரிப்பு ஊழியராக பணியாற்றி வந்தார்.கொரோனா காலத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் வருவாய் இன்றி தவித்து வந்தார். எனவே மொபைல் டவர்களில் உள்ள விலை மதிப்பு மிக்க 'சிப்' களை திருடி விற்க முடிவு செய்தார். அதன்படி 25க்கும் மேற்பட்ட டவர்களில் 'சிப்' களை திருடினார். இதன் மதிப்பு 25 லட்சம் ரூபாய். இதை சரியான விலைக்கு விற்க முடியாமல் தடுமாறி வந்தார். எனவே காயலான் கடையில் அனைத்தையும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X