பொது செய்தி

இந்தியா

கலாசிபாளையாவுக்கு தனி மார்க்கெட் அரசு முடிவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரின் கலாசிபாளையா மார்க்கெட்டின் மொத்த விலை காய்கறி வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் காலம் கூடி வந்துள்ளது. இவர்களுக்கு தனி மார்க்கெட் கட்ட, மாநில அரசு முடிவு செய்துள்ளது.பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட்டில் இயங்கி வந்த, 80 மொத்த விலை காய்கறி கடைகள், 1984ல் கலாசிபாளையாவுக்கு இடம் மாற்றப்பட்டது.ஏ.பி.எம்.சி., எனும் விவசாய உற்பத்தி விற்பனை

பெங்களூரு : பெங்களூரின் கலாசிபாளையா மார்க்கெட்டின் மொத்த விலை காய்கறி வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் காலம் கூடி வந்துள்ளது.

இவர்களுக்கு தனி மார்க்கெட் கட்ட, மாநில அரசு முடிவு செய்துள்ளது.பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட்டில் இயங்கி வந்த, 80 மொத்த விலை காய்கறி கடைகள், 1984ல் கலாசிபாளையாவுக்கு இடம் மாற்றப்பட்டது.ஏ.பி.எம்.சி., எனும் விவசாய உற்பத்தி விற்பனை மார்க்கெட் கமிட்டி எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடம் காய்கறிகள், கீரைகளை மொத்தமாக வாங்க உரிமம் வழங்கப்பட்டது. அடிப்படை வசதிஅன்று முதல் இதுவரை எந்த அரசுகளும் இங்கு அடிப்படை வசதிகளை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை.கலாசிபாளையாவில் இருந்த 80 மொத்த விலை காய்கறி கடைகளின் எண்ணிக்கை, தற்போது 430 ஆக அதிகரித்துள்ளது.அனைத்து கடைகாரர்களும் மாதந்தோறும் 2,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வாடகையும்; ஏ.பி.எம்.சி.,க்கு 0.65 சதவீதம் வரியும் செலுத்துகின்றனர். மழை பெய்தால் சாலைகளில் சாக்கடை நீர் பாய்ந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மார்க்கெட்டில் குப்பையை சரியாக அள்ளுவதில்லை.போக்குவரத்து நெருக்கடி குறுகலான சாலைகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றிய லாரிகள், மற்ற வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. சரக்குகளை இறக்கும் போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சரியான கழிப்பறை வசதியும் இல்லை. பல ஆண்டுகளாக ஆரோக்கியமற்ற சூழ்நிலையிலேயே வியாபாரம் செய்கின்றனர். தங்களுக்கு தனி மார்க்கெட் வசதி செய்து தரும்படி, வியாபாரிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். தற்போது இதை நிறைவேற்ற அரசு மனம் வைத்துள்ளது.சிங்கேன அக்ரஹாராவில் 42 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்த விலை விற்பனைக்கு உரிமம் பெற்றுள்ள 430க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை கட்டிக்கொடுக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. ஏ.பி.எம்.சி., அதிகாரிகள் கூறியதாவது:மார்க்கெட் கட்ட தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த நில உரிமையாளர்களுக்கு, மொத்தம் 48.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களில் நிலம் கை மாறும். அதன்பின் உடனடியாக கடைகள் கட்டும் பணிகள் துவங்கும். பணிகள் முடிந்தால் வியாபாரிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மொத்தம் 42 ஏக்கர் நிலத்தில் 50 முதல் 60 சதவீதம் நிலம், அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்தப்படும். மற்ற இடத்தில் 500 கடைகள் கட்டப்படும்.இங்கு கடைகள் வழங்குவதில், காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை தரப்படும். சிறிதளவு இடம் பூக்கள், பழங்கள் வியாபாரிகளுக்கு கிடைக்கும். பல்வேறு மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து, விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வரும், ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொருட்களை வாங்க வரும், சில்லரை வியாபாரிகள், கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். அகலமான சாலைகள், சாக்கடை வசதி, குடிநீர், மின் விளக்குகள், நடைபாதை, பொது கழிப்பறை, வாகன நிறுத்தம் உட்பட மற்ற வசதிகள் இருக்கும். இங்கு துாய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X