பொது செய்தி

இந்தியா

ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக போராடுவேன்; ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக்

Added : அக் 05, 2021
Share
Advertisement
தாவணகரே : ''எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை; இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஊழல் நடைமுறையில், பணத்தை செலவிட்டு தேர்தலில் போட்டியிடும் சக்தியும் எனக்கில்லை. இனி நான் ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக போராடுவேன்,'' என ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார். தாவணகரேவில் அவர் நேற்று கூறியதாவது:தற்போது நடக்கும் தேர்தல்களை கவனித்தால் என்னை போன்றவர்களால்
ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக போராடுவேன்; ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக்

தாவணகரே : ''எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை; இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஊழல் நடைமுறையில், பணத்தை செலவிட்டு தேர்தலில் போட்டியிடும் சக்தியும் எனக்கில்லை.

இனி நான் ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக போராடுவேன்,'' என ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார். தாவணகரேவில் அவர் நேற்று கூறியதாவது:தற்போது நடக்கும் தேர்தல்களை கவனித்தால் என்னை போன்றவர்களால் போட்டியிட முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு வேட்பாளர்களை களமிறக்குகின்றனர். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஊழல் நடைமுறையில் பணத்தை செலவிட்டு தேர்தலில் போட்டியிடும் சக்தியும் எனக்கில்லை.கொள்ளையர்களுக்கிடையே, என்னால் தேர்தலில் நிற்க முடியாது.

இனி நான் ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக போராடுவேன்.கர்நாடகாவில் மதமாற்ற பிரச்னை அதிகரிக்கிறது. மதமாற்ற தடை சட்டத்தை, மாநில அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா திடமான முடிவெடுக்க வேண்டும். சட்டம் அமல்படுத்தினால் மட்டும் போதாது. மிகமும் கடுமையாக இருக்க வேண்டும். மதமாற்றம் செய்தது உறுதியானால், சிறை தண்டனை விதிக்கும் சட்டம் வர வேண்டும். அப்போது தான் பயம் இருக்கும். மதமாற்றம் என்பது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே துவங்கி விட்டது. எம்.எல்.ஏ., கூலிஹட்டி சேகர், தன் தாயை மதமாற்றம் செய்துள்ளதாக சட்டசபையில் கூறியுள்ளார். இது துரதிருஷ்டவசமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X