அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., புதிய நிர்வாகிகள் அண்ணாமலை பட்டியலுக்கு கிடைக்குமா ஒப்புதல்?

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, மேலிட ஒப்புதலுக்காக அண்ணாமலை அனுப்பினார். அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாததால், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு தள்ளிப் போகிறது. அதே நேரத்தில் பட்டியலை திருத்த வேண்டும் என, பழைய நிர்வாகிகள் பலரும் மேலிடத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை
அண்ணாமலை,பாஜ, புதிய நிர்வாகிகள், ஒப்புதல், பட்டியல், ஒப்புதல், B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து, மேலிட ஒப்புதலுக்காக அண்ணாமலை அனுப்பினார். அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாததால், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு தள்ளிப் போகிறது. அதே நேரத்தில் பட்டியலை திருத்த வேண்டும் என, பழைய நிர்வாகிகள் பலரும் மேலிடத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதும், பழைய நிர்வாகிகளை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என முடிவெடுத்து, கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் இளைஞர்கள் பலரையும் சேர்த்து, பட்டியல் தயார் செய்தார். தகவல் வெளியாகாமல் ரகசியமாக தான் வைத்திருந்தார். ஆனால், தற்போது நிர்வாகிகளாக இருக்கும் சிலர், எப்படியோ கண்டுபிடித்து விட்டனர். தங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றதும், அந்த பட்டியலை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். பட்டியலுக்கு அனுமதி தரக்கூடாது என, மேலிடத்துக்கு பல வகைகளிலும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால், காரணம் சொல்லப்படாமலே பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது தள்ளிப் போகிறது.

அதே நேரத்தில், அண்ணாமலைக்கும், மூத்த தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். 'நிர்வாகிகள் பட்டியலில் திருத்தம் செய்து மீண்டும் அனுப்புங்கள். அதில், தற்போதைய நிர்வாகிகள் பலரையும் இணைத்து கொள்ளுங்கள்'என்கின்றனர். அப்போது தான், நிர்வாகிகள் பட்டியல் கிடப்பில் உள்ளதற்கான காரணத்தை, அண்ணாமலை கண்டறிந்தார். ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, பதவியை ராஜினாமா செய்தவர்களை, மீண்டும் பொறுப்புக்கு கொண்டு வர, கட்சி அலுவலகமான கமலாலயத்தில் உள்ள தலைவர்கள், அண்ணாமலைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். 'அவர்களை எல்லாம் நிர்வாகிகளாக போட்டு தான் கட்சியைநடத்த வேண்டும் என்றால், அப்படியொரு தலைவர் பதவியே வேண்டாம் என்று போய் விடுவேன்' என அண்ணாமலை கூறிய பின்னும் சிபாரிசுகள் தொடருகின்றன.

ஒவ்வொரு முறையும் டில்லி செல்லும் போதும், நிர்வாகிகள் பட்டியலை வலியுறுத்தி விட்டு தான் வருகிறார். ஆனாலும்,எதுவும் நடக்கவில்லை. கடந்த செப்., 17ல் இருந்து அக்., 7 வரை, 20 நாட்களுக்கு, தமிழகத்தில் தொடர்ச்சியாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி களுக்கு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான நிர்வாகிகள் பலரும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதை பார்த்து கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர்.

'எல்லா நிகழ்ச்சிகளுக்கும், நடிகையருக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை; தேவையான நிகழ்ச்சிகளுக்கு மட்டும், அவர்கள் வந்தால் போதும்' என்று அண்ணாமலை கூறி இருந்தார். ஆனால், அவர் பதவியேற்றதும் சிறிது காலத்துக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகையர், மீண்டும் புற்றீசலாக கிளம்பி விட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர். இதை வைத்து, அவர்களுக்கு கட்சி பதவி கொடுக்கும்படி, அண்ணாமலைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அண்ணாமலை டில்லி செல்ல உள்ளார். புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிக்கும் முனைப்பில் உள்ளார். இதை அறிந்த பழைய நிர்வாகிகள் பலரும், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இவ்வாறு கட்சிவட்டாரங்கள் கூறின.


latest tamil news

'யார் அழுத்தமும் எடுபடாது!'கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்ல இளைஞர் படை தயாராக உள்ளது. அவர்களில் பலருக்கும் தகுதியும், திறமையும் உள்ளது. அவர்களுக்கு புதிய நிர்வாகியாகும் வாய்ப்பு கிடைக்கலாம். பழையவர்களாக இருந்தாலும், தகுதியானவர்களை பா.ஜ., தலைமை புறக்கணிக்காது. நல்லவர்களை, வல்லவர்களை கண்டிப்பாக வரவேற்பர். அதனால், விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு வெளியாகும். உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடன் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். மற்றபடி, இதில் யார் என்ன அழுத்தம் கொடுத்தாலும், அது எங்கும் எடுபடாது. புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல புது ரத்தம் பாய்ச்சப்படும்.

-அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202117:27:42 IST Report Abuse
அப்புசாமி விரைவிலேயே பா.ஜ விலும் கோஷ்டி கானம்... நேயர் விருப்பம்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
05-அக்-202114:26:17 IST Report Abuse
sankar அண்ணாமலைக்கு அரோகரா
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
05-அக்-202114:06:40 IST Report Abuse
Dhurvesh இன்னும் அந்த கட்சி கண் முன்னே இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X