கோவையில் குப்பை கொட்டினால் அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் குப்பை கொட்டினால் அபராதம்

Added : அக் 05, 2021
Share
கோவை : கோவையில் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் குப்பையை விசினால், அபராதம் விதிக்க, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார். நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 52வது வார்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களை நேற்று சந்தித்த கமிஷனர் ராஜகோபால், ''வீடு வீடாகச்

கோவை :

கோவையில் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் குப்பையை விசினால், அபராதம் விதிக்க, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார். நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 52வது வார்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களை நேற்று சந்தித்த கமிஷனர் ராஜகோபால், ''வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதோடு, பணி முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். எந்தெந்த வீடுகளில் குப்பை கொடுக்கவில்லை என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வீடுகளை தொடர்ந்து கண்காணியுங்கள். அவர்கள், பொது இடத்தில் திறந்தவெளியில் கொட்டினால் அபராதம் விதியுங்கள்,'' என உத்தரவிட்டார்.இதையடுத்து, அபராதம் விதிக்கும் பணியை, சுகாதாரப் பிரிவினர் நேற்று துவக்கினர். முதல் நாளான நேற்று, 10 ஆயிரம் ரூபாய் வசூலானது.இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், கமிஷனர் அறிவுறுத்தியிருக்கிறார்.80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நடவடிக்கை படிப்படியாக கடுமையாக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X