அரசியல் செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: பா.ஜ., மேலிட இணை பார்வையாளர் பேட்டி

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரை: ''தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம், தர்ணா நடைபெற உள்ளது,'' என பா.ஜ., மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடியின் 20 வருட அரசுப்பணி சேவையை பாராட்டும் விதமாக சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ்


மதுரை: ''தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம், தர்ணா நடைபெற உள்ளது,'' என பா.ஜ., மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடியின் 20 வருட அரசுப்பணி சேவையை பாராட்டும் விதமாக சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப். 17 முதல் அக். 7 வரை இந்தியா முழுவதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம்.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நாட்களிலும் கோயில் திறக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி அக். 7ல் பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் தர்ணா, போராட்டம் நடக்கும். இந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க., அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர்கள் புகைப்படத்துடன் பிரதமர் படமும் அச்சிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த திட்டத்திலும் பிரதமரின் படம் இடம் பெறவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X