அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பறக்கும் படையினரின் தேர்தல் பணி கண்துடைப்பு: வெறும் 4.69 லட்சம் மட்டுமே பறிமுதல்

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நடந்த பறக்கும் படை சோதனையில், வெறும் 4.69 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தேர்தல் அதிகாரிகளின் பணி கண்துடைப்பாக இருப்பதைபோல் உள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம், 13ம் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.தேர்தல் நடத்தை விதிகளான அரசியல் கட்சி
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பறக்கும்படை, தேர்தல்பணி, கண்துடைப்பு, பறிமுதல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நடந்த பறக்கும் படை சோதனையில், வெறும் 4.69 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தேர்தல் அதிகாரிகளின் பணி கண்துடைப்பாக இருப்பதைபோல் உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம், 13ம் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.தேர்தல் நடத்தை விதிகளான அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை மறைப்பது, கட்சி கொடிகளை அகற்றுவது, மக்கள் பிரதிநிதி அலுவலகங்களை மூடுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும்.


பரிசு பொருட்கள்



ஆனால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை அதுபோன்ற நடைமுறைகள் சில இடங்களில் கண்துடைப்புக்காகவே செய்யப்பட்டன.தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமான வாகன சோதனை நடத்துவது, பண பட்டுவாடாவை தடுப்பது போன்ற பணிகள், கடமைக்காகவே நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் ஒரு மாதம் அமலில் இருக்கும் சூழலில், வெறும் 2.49 லட்சம் ரூபாய் மற்றும் சேலை, விளக்கு, டவல், அரிசி சிப்பம் இதுபோன்ற சொற்ப எண்ணிக்கையில் ஆன, பணமும், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களில், 2.20 லட்சம் ரூபாய், 116 அரிசி சிப்பம், 637 மதுபாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, 24 மணி நேரமும் நடைபெறக்கூடிய இந்த சோதனையில், எவ்வளோ கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்திருக்க முடியும்.ஆனால் வெறும் 4.69 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது, அவர்கள் எந்த அளவுக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.


சந்தேகம்



ஆறு மாதங்களுக்கு முன், இதே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சட்டசபை தேர்தலில், தொகுதிகளுக்கு அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம், கோடிகணக்கான ரூபாய் ரொக்கமும், லட்சணக்கணக்கில் பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தேர்தல் வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணபட்டுவாடா நடைபெறும்போதே கையும் களவுமாக பிடித்தனர். நிறைய பேர் மீது பண பட்டுவாடா செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இம்முறை காஞ்சியின் ஐந்து ஒன்றியங்கள், செங்கையின் எட்டு ஒன்றியங்களுக்கும், தலா மூன்று பறக்கும் படையினர் அமைக்கப்பட்டும், அலட்சியமாக இருந்ததால்தான், வெறும் சொற்ப தொகை ரொக்கமும், குறைந்த அளவில் பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மாவட்ட நிர்வாகம், தேர்தல் பணிகளில் மட்டும் மும்முரமாக ஈடுபட்டுள்ளதே தவிர, பண பட்டுவாடா, பொருட்கள் வழங்கியதில் மெத்தனமாகவே இருந்துள்ளது.தேர்தல் முடிந்த பின் ஆளுங்கட்சி மூலம் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சம் கண்டு, நடவடிக்கை எடுக்க தயங்கிவிட்டனரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.


காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு




latest tamil news



உத்திரமேரூர் ஒன்றியத்தில், 252 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பேனா, பென்சில், அரக்கு, வாக்காளரின் விரலில் வைக்கப்பட உள்ள அழியா மை உள்ளிட்ட பொருட்கள் 'பேக்கிங்' செய்யப்படும் பணி நடந்து வருகிறது.இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காஞ்சிபுரம் கலெக்டருமான ஆர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகளை எண்ணும் மையமான, திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சுதாகர் உடனிருந்தார்.


சீட்டு தரம் பிரிக்க பெட்டிகள் தயார்



latest tamil news




வாலாஜாபாத் ஒன்றியத்தில், நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை என, நான்கு வகையான சீட்டுகளை பயன்படுத்தி, கிராம மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டு சீட்டுகளை தரம் பிரித்து எண்ணுவர். ஓட்டு சீட்டுகளை நிறம் பிரித்து போடுவதற்கு, மரப்பெட்டிகளை தயாரிக்கும் பணியை, மரத்தச்சர்கள் துவக்கி உள்ளனர். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக பழைய கட்டடத்தில், மரப்பெட்டிகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
05-அக்-202116:22:50 IST Report Abuse
Vena Suna பாவிகள் இவர்கள் அனுபவிப்பார்கள்.
Rate this:
Cancel
05-அக்-202114:50:57 IST Report Abuse
ராஜா திமுக ஆட்சியில் தேர்தல். நேர்மையான முறையில் நடைபெறும் என்று நம்புபவன் நவீன உலகின் முட்டாள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-அக்-202111:57:46 IST Report Abuse
raja யாரும் மர்ம நபர்களால் தாக்க படுவதற்கு விரும்ப மாட்டார்கள் தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X