பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... அசல் மதிப்பெண் சான்று வழங்கல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
நேற்று முதல், உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்படுகிறது. மாணவர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, சான்றிதழ்களை வாங்கி வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மொத்தம், 57 பள்ளிகளில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பலர், பத்தாம் வகுப்பு முடித்து, அதே பள்ளியில், பிளஸ் 1

நேற்று முதல், உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்படுகிறது. மாணவர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, சான்றிதழ்களை வாங்கி வருகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மொத்தம், 57 பள்ளிகளில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பலர், பத்தாம் வகுப்பு முடித்து, அதே பள்ளியில், பிளஸ் 1 வகுப்பை தொடர்வதால், சான்றிதழ்களை எளிதாக வினியோகிக்க முடிகிறது.மேல்படிப்பு, பிற பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், நேரடியாக பள்ளிக்கு வந்து சான்றிதழ்களை வாங்கிச் செல்கின்றனர். அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், 4,838 மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கிராமசபையில் சட்ட விழிப்புணர்வு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு நேற்றுமுன்தினம் ஊராட்சிகளில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 12 கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில், பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முகாம் தொடக்க விழா, பாப்பான்குளம் கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் நீதிபதிகள், மணிகண்டன், பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுற்றுலா குறித்து விழிப்புணர்வு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறையால் 'சுற்றுலாவும் உள்ளடக்கிய வளர்ச்சியும்' என்ற விழிப்புணர்வு பயணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், உடுமலை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் வீரர்கள் பலர்கலந்து கொண்டனர்.
அவர்களில், பெருமாள்புதுாரைச் சேர்ந்த ரகு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்தார். அதேபோல், கிருஷ்ணகுமார், அருண்கவுசிக், ஜேம்ஸ்வர்கீஸ் ஆகியோர் 600 கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்தனர்.இவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க உடுமலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உடுமலை தேஜஸ் ரோட்டரி தலைவர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தினர். ரோட்டரி நிர்வாகிகள் சத்யம்பாபு, நாகராஜ், சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் உதயகுமார், ஸ்ரீநிதி, கிருஷ்ணகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கத்தரி விலை நிலையானதால் மகிழ்ச்சி
உடுமலை சுற்றுப்பகுதியில், ஒவ்வொரு சீசனிலும், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், கிணற்று பாசனத்துக்கு, கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது.இதில், நாட்டு ரகம் குறைவான பரப்பிலும், வீரிய ஒட்டு ரகங்கள் அதிகளவிலும் சாகுபடியாகிறது.
கடந்த சீசனில், காய்த்துளைப்பான் உட்பட நோய்த்தாக்குதலால், தரமான கத்தரி உற்பத்தியாகாமல், விவசாயிகள் பாதித்தனர்.மேலும், மழை சீசன் துவங்கி, செடிகளில் பூ உதிர்தல் உட்பட பிரச்னைகளால், உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது.எனவே, தற்போது, கத்தரிக்கு, உடுமலை உழவர் சந்தையில், கிலோ 20 ரூபாய் முதல் 26 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'கத்தரிக்கு தற்போது நிலையான விலை கிடைக்கிறது. ஆனால், செடிகளில் காய்ப்பு திறன் முடியும் தருணத்தில் உள்ளது. எனவே, மீண்டும் நாற்று நடவு செய்து, காய்கள் உற்பத்திக்கு சற்று இடைவெளி ஏற்படும். எனவே, கத்தரி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.

வீடுகளை புதுப்பிக்க கோரிக்கை
பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளான, பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்களில், 17 பழங்குடியின செட்டில்மென்ட் பகுதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில், 22க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.இவற்றில் பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதில், கான்கிரீட் வீடுகளின் மேற்கூரைகள் சிதிலமடைந்து மழைநீர் கசிவதுடன், கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
சிமென்ட் 'ஷீட்' மற்றும் தகரம் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. பழங்குடியின மக்கள் அனுதினமும் இன்னலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். விரைவில், வீடுகளை புதுப்பிக்க பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுாலகம் எங்கே; நுாதன புகார்
பொள்ளாச்சி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஐயப்பன், சப் - கலெக்டரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலகம் கடந்த ஒரு ஆண்டாக காணவில்லை. நுாலகத்தை, புதிதாக அமைக்கப்பட்ட நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கலைக்கல்லுாரி வளாகம், கட்டப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
நுாலகத்தை காணவில்லை; கண்டு பிடித்து தாருங்கள் என போலீசாரிடம் புகார் அளித்தேன். அடுத்த கட்டமாக, விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, சப் - கலெக்டரான உங்களிடம் நேரடி புகார் அளிக்கிறேன். நகரில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு லட்சம் புத்தகங்களுக்கு அதிகமாக இருந்த மரப்பேட்டை நுாலகத்தை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பல்வேறு அரசு கட்டடங்கள் புதிதாக அமைக்கப்படும் நிலையில், முதல்நிலை நுாலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது என்பதை, வித்தியாசமாக தெரிவிக்க இப்படியொரு புகார் மனுவை அளித்துள்ளார்.பாசன பரப்பு ஆயக்கட்டில் சேருமா?கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் கிராம எல்லையில், 250 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி குளம் வறண்டு காணப்படுகிறது.

குளத்தில் நீர் விட்டு நிரப்பினால், நேரடியாக, 300 ஏக்கர் விளை நிலம் பாசனம் பெறும். எனவே, 50க்கும் மேற்பட்ட கோதவாடி கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில், 300 ஏக்கர் பாசன பரப்பை, பி.ஏ.பி.,ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும்.மேலும், பி.ஏ.பி., கால்வாய் செல்லும் பச்சார்பாளையம் பகுதியில் இருந்து, ஐந்து கி.மீ., துாரத்துக்கு கால்வாய் அமைத்து, மெட்டுவாவி பகுதி வழியாக, கோதவாடி குளத்துக்கு தண்ணீர் விட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கடந்த, 2019ல் கோதவாடி ஊராட்சியில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய கிராமசபை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பட்டது.பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்வால்பாறையில் பா.ஜ., கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, பா.ஜ., மண்டலத்தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.

கோவை மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மண்டல பொதுச்செயலாளர்கள் கார்த்திக், செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கட்சியின் புதிய நிர்வாகிகளை பா.ஜ., மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் பாபாரமேஷ், மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.அவர்கள் பேசும்போது, 'தமிழக அரசு அறிவித்துள்ள சம்பளத்தை எஸ்டேட் நிர்வாகங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, புதிய நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை மக்களிடையே தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். அனைவரும் சேவை மனப்பான்மையோடு, கட்சியை பலப்படுத்த வேண்டும்,' என்றனர்.கூட்டத்தில், பா.ஜ., தொழில்நுட்ப அணி மண்டல தலைவராக பிரஜேஸ், இளைஞரணி துணைத்தலைவராக முகேஸ் உள்ளிட்ட எட்டு பேர் புதிய நிர்வாகிகளாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X