பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பாலங்களில் தேங்கும் மழை நீர் : நிரந்தர தீர்வுக்கு மக்கள் காத்திருப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள, ரயில்வே தரை மட்ட பாலங்களில், மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கும் பிரச்னைக்கு, ரயில்வே மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையின் இருபுறங்களிலும், உடுமலையைச்சேர்ந்த, கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு, தேசிய, மாநில
 ரயில்வே பாலங்களில் தேங்கும் மழை நீர் : நிரந்தர தீர்வுக்கு மக்கள் காத்திருப்பு

உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள, ரயில்வே தரை மட்ட பாலங்களில், மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கும் பிரச்னைக்கு, ரயில்வே மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையின் இருபுறங்களிலும், உடுமலையைச்சேர்ந்த, கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு, தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளது.

அகல ரயில்பாதை பணிகளின் போது, கிராமங்களுக்கு செல்ல, ரயில்வே நிர்வாகத்தால், தரை மட்ட பாலங்கள் கட்டப்பட்டன.இதில், பல பாலங்கள், மழைக்காலத்தில், தடுப்பணைகளாக மாறி, அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை நிரந்தரமாகியுள்ளது.மழை நீரை வெளியேற்றவும் எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால், பல நாட்கள், தண்ணீரில் தத்தளித்தபடி, வாகனங்கள் சென்று வருகின்றன.
அவ்வகையில், தற்போது பெரியகோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி செல்லும் வழித்தடத்திலுள்ள, பாலத்திலும், சமீபத்திய மழைக்கு பிறகு, தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது.இதே போல், பாலப்பம்பட்டி, பழனியாண்டவர் நகர், பூலாங்கிணறு, அந்தியூர் உட்பட பகுதிகளிலுள்ள, பாலங்களிலும், இதே பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. சில நேரங்களில், பாலத்தில் தேங்கியுள்ள அளவு தெரியாமல், செல்லும் வாகன ஓட்டிகள், தண்ணீரில், சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இந்த பாலங்களில், தண்ணீர் தேங்குவதை தடுக்க, ரயில்வே நிர்வாகமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இணைந்து, மழை நீரை வெளியேற்ற, மோட்டார் அமைத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X