பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய இடங்களை அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி: சிங்கிள் டெண்டர் போட்டு ஏமாற்றிய சிண்டிகேட்!

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வணிக இடங்களை ஏலம் விட்டதில் கூட்டணி அமைத்து அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி நடந்துவருகிறது.வீட்டு வசதி வாரியத்தின் கோவை பிரிவின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் நீண்ட காலத்துக்கு முன் உருவாக்கிய வணிக மனைகள் பல விற்பனையாகாமல்
வீட்டுவசதிவாரியம், இடங்கள், அடிமாட்டு விலை,முயற்சி   சிங்கிள் டெண்டர், சிண்டிகேட்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வணிக இடங்களை ஏலம் விட்டதில் கூட்டணி அமைத்து அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி நடந்துவருகிறது.

வீட்டு வசதி வாரியத்தின் கோவை பிரிவின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் நீண்ட காலத்துக்கு முன் உருவாக்கிய வணிக மனைகள் பல விற்பனையாகாமல் இருந்தன. தற்போது அந்த மனைகளின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால் வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றை ஏலம் விடுவதில் இவ்வளவு காலம் ஆர்வம் காட்டாத வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், இப்போது அடிமாட்டு விலையை நிர்ணயித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏழு வீட்டு வசதித் திட்டங்களில் இருந்த வணிக இடங்களை விற்பனை செய்வதற்கான ஏலம், கடந்த 23ம் தேதி கோவை வாரிய அலுவலகத்தில் நடந்துள்ளது. இத்தகைய இடங்களை ஏலம் விடும்போது, அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு, அதிகளவில் ஏலதாரர்களை ஈர்ப்பது வழக்கம். ஆனால் பெரியளவில் விளம்பரம் எதுவும் செய்யாமல், ரகசியமாக இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு சிங்கிள் டெண்டர் மட்டுமே வந்துள்ளது. அரசின் விதிப்படி, இத்தகைய ஏலங்களை ஏற்கவே கூடாது. அதேபோன்று, சந்தை மதிப்பு பல மடங்கு இருக்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு இந்த இடங்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news




உதாரணமாக உடுமலை அண்ணா குடியிருப்புப் வணிக மனையிடத்தின் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், 20 லட்சத்துக்கும் குறைவாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சென்ட் 10 லட்சம் ரூபாய் விலை போகுமிடத்தில், வெறும் 80 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வாரிய அலுவலர்களே குமுறுகின்றனர்.

காளப்பட்டி பிருந்தாவன் நகர், நேரு நகர், கணபதி, வெள்ளக்கிணர், கோவைப்புதுார், குறிச்சியிலும், சந்தை மதிப்பில் பாதிக்குப் பாதி அளவுக்கே மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளன.வாரிய அதிகாரிகள், தனிநபர்கள் சிலருடன் சிண்டிகேட் அமைத்து, இந்த இடங்களை குறைந்த விலைக்கு விற்று, தனிப்பட்ட முறையில் பலன் பெற முயற்சிக்கின்றனர் என்பது குற்றச்சாட்டு. இந்த ஏலத்தை ரத்து செய்து மறுஏலம் விட வேண்டுமென்று வீட்டு வசதித்துறை செயலருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வீட்டு வசதி வாரிய கோவை பிரிவு நிர்வாகப் பொறியாளர் எட்வினிடம் கேட்டதற்கு, ''நான் பொறுப்புக்கு வந்து 10 நாள் தான் ஆகின்றன. எனக்கு முன்பிருந்த நிர்வாகப் பொறியாளர்தான், இந்த மதிப்பை நிர்ணயித்துள்ளார். அதை வாரியமும் ஏற்றுள்ளது. சிங்கிள் டெண்டரை ஏற்கலாமா, வேண்டாமா என்பதையும் வாரியமே முடிவு செய்யும். நடந்துள்ள ஏலம் இறுதி என்று சொல்ல முடியாது. இழப்பு ஏற்படுவதாக வாரிய உறுப்பினர்கள் கருதினால், இதை ரத்து செய்து மறுஏலம் விடவும் முடியும்,'' என்றார்.

நிதிச்சுமையில் இருப்பதாகக் கூறும் தமிழக அரசு, அரசு மனையிடத்தை அடிமாட்டு விலைக்கு விற்கும் வாரியத்தின் முயற்சியை ஏன் தடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகள் கூட்டணி சேர்ந்து வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்த முயற்சி செய்திருந்தால் அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதுடன், மறுஏலம் விட உத்தரவிடுவதே நல்ல அரசுக்கு அழகாகும்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
05-அக்-202114:03:18 IST Report Abuse
M S RAGHUNATHAN Scientific நில அபகரிப்பு. திமுக காரனுக்கு சொல்லியா தரணும். ஊழல் தாத்தா வழி வந்தவர்கள் அல்லவா
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
05-அக்-202113:09:17 IST Report Abuse
Raman சென்னையில் இன்று ஐந்து இடங்களில் இலவச ஜெலுசில் மற்றும் பார்நால் வழங்கப்படும். ஒரு சங்கிக்கு எதாவது ஒரு பொருள் மட்டுமே கொடுக்கப்படும்.. ஹி ஹி ஹி
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
05-அக்-202111:55:45 IST Report Abuse
raja இப்படித்தான் கட்டுமர ஆட்சியில் எல்லா சாராயக்கடிகளையும் சிண்டிகேட் வைத்து தனது உடன்பிறப்புகளுக்கே அடிமாட்டு விலைக்கு பார்களுடன் வழங்கினார்கள்... எதிர்த்தவர்கள் மண்டையை உடைத்தார்கள்... பின் அம்மா ஆட்சியில் எல்லா கடைகளும் அரசே டாஸ்மாக் என்று எடுத்து நடத்தியது... அடுத்த ஆட்சி பதவி ஏற்கும் வரை இப்படித்தான்... ஒட்டு போட்டிங்கள்ல அனுபவிங்க மக்கா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X