பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் சேகரமாகும் குப்பை வகை பிரித்து அளிக்க வலியுறுத்தல்

Added : அக் 05, 2021
Share
Advertisement
உடுமலை:குடியிருப்பு வீடுகளில் சேகரமாகும் குப்பையை வகை பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என, நகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, திடக்கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வாகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால், நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சந்துகள்,

உடுமலை:குடியிருப்பு வீடுகளில் சேகரமாகும் குப்பையை வகை பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என, நகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, திடக்கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வாகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால், நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சந்துகள், கடைவீதிகள் என எந்தவொரு பகுதிகளிலும் குப்பை கொட்ட தடை உள்ளது.குடியிருப்புவாசிகள் திறந்த வெளியில் குப்பைக்கொட்டுவதை தவிர்த்து, அவைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என, வகை பிரித்து அளிக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இருப்பினும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு இன்மை, அலட்சியம் போன்ற காரணங்களால், குப்பை வகை பிரித்து அளிக்கப்படுவதில்லை.நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் கூறுகையில் 'குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, இதை வகை பிரித்து அளிப்பதும், அவற்றை மறுசுழற்சி மற்றும் மட்கச்செய்தல் வேண்டும். எனவே, அவற்றை வகைப்பிரித்து அளிக்க வேண்டும். அப்போது மட்டுமே நகராட்சி வாகனம் வாயிலாக, வீடு வீடாகச்சென்று எளிதாக சேகரம் செய்ய முடியும். அதற்கு மாறாக, திறந்த வெளியில் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X