பொது செய்தி

தமிழ்நாடு

1.5 ஏக்கரில் 55 டன் பாகற்காய் அறுவடை; சாதனை விவசாயிக்கு குவியுது பாராட்டு

Added : அக் 05, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஒன்றரை ஏக்கர் பரப்பில், பாகற்காய் சாகுபடி மேற்கொண்டு, 160 நாட்கள் வரை அறுவடை செய்து, 55 டன் வரை ஆதாயம் பெற்றதாக, விவசாயி லட்சுமணன் தெரிவித்தார்.பொள்ளாச்சி அடுத்துள்ள, கப்பளாங்கரையை சேர்ந்தவர் லட்சுமணன்; பந்தல் காய்கறி விவசாயி. கப்பளாங்கரை - கோப்பனுார்புதுார் ரோட்டின் இடதுபக்கத்தில், 37 ஆண்டுகளாக வளர்ந்து, பலன் கொடுத்த, 120 தென்னை மரங்களை வெட்டி
 1.5 ஏக்கரில் 55 டன் பாகற்காய் அறுவடை; சாதனை விவசாயிக்கு குவியுது பாராட்டு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஒன்றரை ஏக்கர் பரப்பில், பாகற்காய் சாகுபடி மேற்கொண்டு, 160 நாட்கள் வரை அறுவடை செய்து, 55 டன் வரை ஆதாயம் பெற்றதாக, விவசாயி லட்சுமணன் தெரிவித்தார்.பொள்ளாச்சி அடுத்துள்ள, கப்பளாங்கரையை சேர்ந்தவர் லட்சுமணன்; பந்தல் காய்கறி விவசாயி. கப்பளாங்கரை - கோப்பனுார்புதுார் ரோட்டின் இடதுபக்கத்தில், 37 ஆண்டுகளாக வளர்ந்து, பலன் கொடுத்த, 120 தென்னை மரங்களை வெட்டி அகற்றியவர், நிலத்தை பண்படுத்தி, கடந்த ஏழு ஆண்டுகளாக, பந்தல் முறையில், பாகற்காய் சாகுபடி மேற்கொண்டு வருகிறார்.துவக்கம் முதலே, பாகற்காய் சாகுபடி மேற்கொள்வதால் இழப்பு ஏற்படுவதில்லை. இதுவரை லாபமே கிடைத்துள்ளது என்கிறார்.தற்போது, 1.5 ஏக்கரில் பாகற்காய் சாகுபடி மேற்கொண்டுள்ள இவர், 55வது நாளில் அறுவடையை துவக்கி, 160 நாள் வரையில் அறுவடை மேற்கொண்டு சாதித்துள்ளார். இதற்கு, மண் வளம், விதை நேர்த்தி, மருந்து தெளிப்பில் சிக்கனம், இதுவே காரணம் என்கிறார்.விவசாயி லட்சுமணன் கூறியதாவது:செம்மண் நிலத்தை உழுது, கோழி எரு மற்றும் தொழு உரம் ஆகியன கலந்து, மீண்டும் உழவு செய்தேன். எப்போதும் மண்ணில் மண் புழு இருப்பதை உறுதி செய்து கொள்வேன்.நிழலில் விதை நேர்த்தி மேற்கொண்டு, குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது, சொட்டு நீர் பாசனத்தில், 1.5 ஏக்கரில் பாகற்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு நாள் இடைவெளியில், 30 நிமிடம் நீர் பாசனம் கொடுக்கப்படுகிறது. 55வது நாளில் இருந்து அறுவடை துவங்குகிறது. பெரும்பாலும், 110 அல்லது, 120 நாட்களில் அறுவடை முடிந்து விடும். தற்போதைய ஒன்றரை ஏக்கர் சாகுபடியில், 160 நாட்கள் வரை அறுவடை செய்து, 55 டன் காய்கள் கிடைத்திருக்கிறது.இயற்கை முறை மற்றும் ரசாயன உரமிடுதல் முறையை பாதிக்கு பாதி மேற்கொள்ளப்படுகிறது. நோய், பூச்சி தாக்குதல் தென்பட்டால், தேவையான மருந்தில் பாதியை மட்டும் தெளிப்பதும் நீண்ட நாள் அறுவடைக்கு காரணமாகும்.இவ்வாறு, தெரிவித்தார்.அதிக நாள் அறுவடை, அதிக மகசூல் செய்து சாதனை படைத்த விவசாயிக்கு, விதை நிறுவனம், மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X