பொது செய்தி

தமிழ்நாடு

'அ' ஸ்டிக்கருடன் உலா வரும் வாகனங்கள்! விவரம் சேகரிக்கும் போலீசார்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை: தனியார் வாகனங்களில் 'அ' அல்லது மனித உரிமை அமைப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.மாநிலம் முழுவதும் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துடன் தனியாருக்கு சொந்தமான பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மனித உரிமை அமைப்பு, போலீஸ், பிரஸ், அரசு பணி, வக்கீல் என்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டு வைத்தும் பலர் வாகனம் இயக்கி வருகின்றனர்.

கோவை: தனியார் வாகனங்களில் 'அ' அல்லது மனித உரிமை அமைப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.மாநிலம் முழுவதும் 'ஜி' அல்லது 'அ' என்ற எழுத்துடன் தனியாருக்கு சொந்தமான பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மனித உரிமை அமைப்பு, போலீஸ், பிரஸ், அரசு பணி, வக்கீல் என்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டு வைத்தும் பலர் வாகனம் இயக்கி வருகின்றனர். இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் வாகன சோதனையில் போலீசாருக்கு ஒத்துழைப்பதில்லை. எதற்கு வாக்குவாதம் என்று போலீசாரும் விட்டுவிடுகின்றனர்.இந்த வாகனங்களை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே இப்படி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை நிறுத்தி உரிய முறையில் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனையின்போது தகராறில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்யும் போலீசார், தனியாக அறிக்கை தயார் செய்கின்றனர்.வாகன பதிவு எண், உரிமையாளர் பெயர், ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரம் அறிக்கையில் இடம் பெறுகிறது. சோதனையிடும் தேதி, நேரம், உரிமையாளர் மொபைல் எண், அலுவலக முகவரி, வீட்டு முகவரி, வாகன் செயலி போன்ற தகவல்களும் இடம் பெறுகின்றன. சேகரிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் மாநில அளவில் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X