பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைக்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: 'அட்மா' விவசாயிகளுக்கு பயிற்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றிய, 'அட்மா' திட்டத்தின் கீழ், சூலக்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு, மண்புழு வளர்ப்பு மற்றும் உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றிய 'அட்மா' திட்ட செயல் விளக்க கூட்டம் சூலக்கல்லில் நடந்தது. இதில், விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு குறித்து விளக்கம் தரப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தலைமை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றிய, 'அட்மா' திட்டத்தின் கீழ், சூலக்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு, மண்புழு வளர்ப்பு மற்றும் உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றிய 'அட்மா' திட்ட செயல் விளக்க கூட்டம் சூலக்கல்லில் நடந்தது. இதில், விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு குறித்து விளக்கம் தரப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தலைமை வகித்தார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா வரவேற்று,'அட்மா' திட்டம் மற்றும் வேளாண்துறையில் உள்ள திட்டங்கள், மானியங்கள் குறித்து தெரிவித்தார். பயிற்சியில், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சிவகுமார் பங்கேற்று, தென்னை ரகங்கள், எண்ணெய் தயாரிப்பு, மற்றும் இளநீர் உயர் உற்பத்தி ரகங்கள் குறித்து விளக்கமளித்தார்.மேலும், தென்னைக்கு ஆண்டுக்கு இரண்டு முறை உரமிட வேண்டும். நுண்ணுாட்டச்சத்து அரைக்கிலோ வழங்க வேண்டும். தென்னை மரத்தில் இருந்து, நான்கு அடி இடைவெளியில் உரமிட வேண்டும்.தென்னை மற்றும் பிற பயிர்களின் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பில், ஆப்ரிகன் வகை மண்புழுவின் தன்மை, செயல்பாடுகள் அதிகரிக்கும்.மண்புழு உரத்துடன், அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை திரவ முறை அல்லது பவுடர் முறையில் கலந்து, உபயோகிக்கலாம். இதனால், மரத்தின் நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும், என, தெரிவித்தார்.தென்னையை தாக்கும் வேர் அழுகல், வெள்ளை ஈ தாக்கம் தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பங்கேற்ற விவசாயிகளுக்கு இடுபொருள்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X