பொது செய்தி

தமிழ்நாடு

சேவை தினம் கொண்டாட்டம்: பா.ஜ.,வினர் நலத்திட்ட உதவி

Added : அக் 05, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பா.ஜ., சார்பில் சேவை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் தாய்மார்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பிரதமர் மோடி பிறந்த நாளை, பா.ஜ.,வினர் சேவை தினமாக கொண்டாடுகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட பா.ஜ., சார்பில், அரசு மருத்துவமனை பிரசவ வார்டில்
 சேவை தினம் கொண்டாட்டம்: பா.ஜ.,வினர் நலத்திட்ட உதவி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பா.ஜ., சார்பில் சேவை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் தாய்மார்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பிரதமர் மோடி பிறந்த நாளை, பா.ஜ.,வினர் சேவை தினமாக கொண்டாடுகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட பா.ஜ., சார்பில், அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள் மற்றும் அவர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.ஒவ்வொருவருக்கும், சேலை, குழந்தைகள் சோப், பவுடர், உள்ளிட்ட பராமரிப்பு உபகரணங்கள் அடங்கிய, தலா, 750 மதிப்புள்ள பெட்டகம், 50 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.பா.ஜ., விவசாய அணியினர், நகரில் பாலித்தீன், பிளாஸ்டிக் ஒழிப்பு, மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி, உறுதிமொழி எடுத்து, மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறினர். கட்சியின் மாநில விவசாய அணி துணை தலைவர் பாபா ரமேஷ் தலைமை வகித்தார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், அரசு மருத்துவமனை உள் நோயாளிகள், 100 பேருக்கு உணவு; 25 பேருக்கு பழங்கள் வழங்கப்பட்டன. நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட தலைவர் வசந்தராஜன், நகர தலைவர் மணிகண்டகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X