பொது செய்தி

தமிழ்நாடு

'திறன் மிக்கவர்கள் திருநங்கைகள்' ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், உதவிக்காக வரும் திருநங்கைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவர்களின் தேவைகள் குறித்து அறிந்து, அவற்றை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சுகாசினி கூறுகையில்,

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், உதவிக்காக வரும் திருநங்கைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவர்களின் தேவைகள் குறித்து அறிந்து, அவற்றை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சுகாசினி கூறுகையில், ''திருநங்கைகளுக்கு உதவி செய்தால் போதும். அவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வர். எந்த உதவியும் கிடைக்காத போது தான், அவர்கள் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுகின்றனர். திருநங்கைகளில் பலரும் திறன் மிக்கவர்கள். அதை வெளிக்கொண்டு வந்தால், அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.
இதுதவிர, போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் திருநங்கைகளிடம், நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து திருநங்கைகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இதற்கான கூட்டங்கள் வரும் நாட்களில் நடக்க உள்ளன,'' என்றார்.கூட்டத்தில், 'ஸ்மால் டிப்பரன்சஸ்' அமைப்பின் நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட, 50 பேர் பங்கேற்றனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X