பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் கால்நடைகள் பாதிப்பை தடுக்க நடவடிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
உடுமலை:'மழைக்கால ஈரத்தால், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்,' என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், செடி, கொடிகள் தழைத்து பசுந்தீவனங்கள் அதிகரித்துள்ளன. வளர்க்கப்படும் அதிகப்படியான கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு

உடுமலை:'மழைக்கால ஈரத்தால், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்,' என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், செடி, கொடிகள் தழைத்து பசுந்தீவனங்கள் அதிகரித்துள்ளன. வளர்க்கப்படும் அதிகப்படியான கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இவ்வாறு, மழையால் விளைந்துள்ள பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் எனவும், புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும்கால்நடைத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.அதேபோல், தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை துறையினர் கூறுகையில், 'ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால், காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பால் கறந்தவுடன் மாடுகளை படுக்க வைக்காமல் சிறிது நேரம் கழித்து படுக்க வைக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால், உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெறுதல் அவசியம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X