பொது செய்தி

தமிழ்நாடு

மாமழை போற்றுதும்! நடப்பாண்டு சராசரி பொழிவு அதிகரிப்பு:வட கிழக்கு சீசன் ஆரம்பமே அமர்க்களம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை இயல்பை விட குறைந்தாலும், ஆண்டு மழைப்பொழிவு அதிகரித்துள்ளதோடு, வட கிழக்கு பருவ மழை ஆரம்பமே அதிகரித்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசனம், இறவை மற்றும் மானாவாரி பாசனத்தில், தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என, 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில்

உடுமலை:உடுமலை பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை இயல்பை விட குறைந்தாலும், ஆண்டு மழைப்பொழிவு அதிகரித்துள்ளதோடு, வட கிழக்கு பருவ மழை ஆரம்பமே அதிகரித்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசனம், இறவை மற்றும் மானாவாரி பாசனத்தில், தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என, 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 618.20 மி.மீ., ஆகும். இதில், ஜன., - பிப்., மாத குளிர் கால சராசரி மழையளவு, 14 மி.மீ., இருந்தது.நடப்பாண்டு, உடுமலை பகுதியில், ஜன., மாதம், 11 மழை நாட்களில், 126.6 மி.மீ.,; பிப்., மாதம், 2 நாட்கள், 50 மி.மீ., என, குளிர் காலத்தில், 176.6 மி.மீ., மழை பெய்துள்ளது.அதே போல், அமராவதி அணைப்பகுதியில், 150 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில், 187 மி.மீ., குளிர் கால மழை பெய்துள்ளது.மார்ச் - மே வரையிலான, கோடை கால மழையளவு சராசரி, 135.10 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, இம்மழை குறைந்தது. உடுமலை பகுதிகளில், 53 மி.மீ., மழையும், அமராவதி, 49 மி.மீ.,; திருமூர்த்தி, 67 மி.மீ., ஆக இருந்தது.ஜூன் முதல் செப்., வரையிலான தென் மேற்கு பருவ மழை, சராசரியளவு, 154.80 மி.மீ., ஆகும். நடப்பாண்டு முதல் மூன்று மாதத்தில் இயல்பை விட அதிகரித்தது. இதனால், அமராவதி மற்றும் பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து, அணைகள் நிரம்பின.ஆனால், செப்., மாதம் இயல்பை விட குறைந்தது. உடுமலை பகுதியில், 97.6 மி.மீ., மட்டுமே மழை கிடைத்தது. அமராவதி அணைப்பகுதியில், 110 மி.மீ., மற்றும் திருமூர்த்தி அணையில், 141 மி.மீ., மழை மட்டுமே கிடைத்தது.நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை, இறுதியில் ஏமாற்றியதால், பாசன அணைகளில் நீர் மட்டம் குறைந்து, பாசன பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.பருவம் தவறிய மழையாக, கடந்த, 9 மாதங்களில், உடுமலையில், 327.2 மி.மீ., அமராவதி அணைப்பகுதியில், 299 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில், 495 மி.மீ., மழை பதிவாகி, ஆண்டு மழைப்பொழிவில் கூடுதலாக கிடைத்துள்ளது.அக்., - டிச., வரையிலான, வட கிழக்கு பருவ மழை, ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது. சராசரி மழையளவு, 314.30 மி.மீ.,ஆகும்.உடுமலை பகுதியில், கடந்த, 4 நாட்களில், 71.60 மி.மீ., அமராவதியில், 17 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில், 62 மி.மீ., மழையும் பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு குளிர்கால மழை கூடுதலாக பெய்து, கோடை மழை குறைந்தது. ஆனால், தென்மேற்கு பருவ மழை துவக்கத்தில் சிறப்பாக பெய்ததால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, பாசனத்திற்கு முன்னதாகவே நீர் திறக்கப்பட்டது. மானாவாரி பாசனமும், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து, கிணறு, போர்வெல்களிலும் நீர் அதிகரித்தது.இதனால், நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறிகள் என சாகுபடி அதிகரித்தது. கடந்த மாதம், சராசரியாக, 74 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 5 நாட்கள் மழை பெய்தாலும், 13.6 மி.மீ., மட்டுமே கிடைத்தது. இதனால், சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை, துவக்கத்திலேயே சிறப்பாக பெய்து வருவதால், நடப்பாண்டு, இரு பருவங்களிலும், முழுமையாக சாகுபடி மேற்கொள்ள முடியும்.இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X