பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை சம்பளம் வழங்கணும்: தொழிலாளர்கள் வேண்டுகோள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு மாத சம்பளம் நிலுவையாக உள்ளது.ஆலைத்தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை. பல மாதம் நிலுவை ஏற்பட்டு, கோரிக்கை விடுத்த பின்பு அல்லது போராட்டம் நடத்திய பின்பு சில மாதம் வழங்கப்படுகிறது.தற்போது, ஜூன் முதல்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு மாத சம்பளம் நிலுவையாக உள்ளது.ஆலைத்தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை. பல மாதம் நிலுவை ஏற்பட்டு, கோரிக்கை விடுத்த பின்பு அல்லது போராட்டம் நடத்திய பின்பு சில மாதம் வழங்கப்படுகிறது.தற்போது, ஜூன் முதல் செப்., மாதம் வரை, நான்கு மாத சம்பளம் நிலுவையாக உள்ளது. ஆலையில் நடப்பாண்டு அரவை தொடங்கும் போதே, பல மாதம் நிலுவையாக இருந்தது.அரவை பருவத்தில் நிலுவையான அனைத்து மாத சம்பளமும் கிடைக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் வழங்கப்படவில்லை.இனி வரும் வாரங்களில் சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த விசேஷ நாட்களில், எங்கள் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.நிலுவையாக உள்ள சம்பளத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X