பொது செய்தி

தமிழ்நாடு

மதுப்பழக்கத்தால் மரியாதை கெடும்! விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;'மதுப்பழக்கத்தால், உடல், மன நலம் பாதிப்பதுடன், சமுதாயத்தில் மரியாதையும் கெடும்,' என, அரசு சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சியில் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தாசில்தார் வெங்கடாசலம் தலைமை
 மதுப்பழக்கத்தால் மரியாதை கெடும்! விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

பொள்ளாச்சி;'மதுப்பழக்கத்தால், உடல், மன நலம் பாதிப்பதுடன், சமுதாயத்தில் மரியாதையும் கெடும்,' என, அரசு சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சியில் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தாசில்தார் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.கோவை விழிப்புணர்வு கலைக்குழுவினர், நாட்டுப்புற பாடல் வாயிலாக, பொதுமக்களிடையே மதுப்பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும், சமூகத்தில் மரியாதைக்குறைவு ஏற்படுவது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அத்துடன், கொரோனா பரவல் தடுப்பு முறைகள், குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதே போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, காந்தி சிலை, சூளேஸ்வரன்பட்டி, நகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளுவர் திடல் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எட்டு இடங்களிலும், நடுப்புணி மற்றும் பெரிய நெகமம் பஸ் ஸ்டாண்ட் என மொத்தம், 10 இடங்களில் நடத்தப்படுகிறது.ஆனைமலை வட்டாரத்துக்குட்பட்ட, 10 இடங்களில், உடுமலை ஸ்ரீசரஸ்வதி கலைக்குழுவினர்; வால்பாறை வட்டாரத்துக்குட்பட்ட, 10 இடங்களில், திருப்பூர் நேரு விழிப்புணர்வு கலைக்குழுவினர்; கிணத்துகடவு வட்டாரத்துக்குட்பட்ட, 10 இடங்களில், திருச்சி திருமலை நாடக சபா குழுவினர், மது, கள்ளச்சாராயம், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X