சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊதுபத்தி புகையால் கலைந்த தேன்கூடு: தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி; 17 பேர் காயம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடியில், இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில், மரியாதை செய்ய சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில், 18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிணத்துக்கடவு, கோதவாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி,60. ரேஷன்கடையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், குடும்பத்துடன் கிணத்துக்கடவில் வசித்து

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடியில், இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில், மரியாதை செய்ய சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில், 18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிணத்துக்கடவு, கோதவாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி,60. ரேஷன்கடையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், குடும்பத்துடன் கிணத்துக்கடவில் வசித்து வந்தார். கடந்த, 2ம் தேதி உடல்நலக்குறைவால் இருந்தார். இவரது உடலை கோதவாடி ஆற்றங்கரை மயானத்தில் அடக்கம் செய்தனர்.தமிழ்நாடு நியாயவிலைக்கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் உள்பட, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மரியாதை செய்தனர். அப்போது, சூடம், ஊதுபத்தி ஏற்றப்பட்டது.ஊதுபத்தி புகையானது, சற்று உயரத்தில், மரத்தின் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த தேன்கூடு கலைத்தது. தேனீக்கள் கூட்டமாக பறந்து, அங்கிருந்தவர்களை கொட்டியது.அலறி அடித்து ஓடிய, 18 பேரை தேனீக்கள் கொட்டியது. வலி மற்றும் வீக்கத்தால் அலறியவர்கள், உடனடியாக ஆம்புலன்சில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அன்று இரவே, சிகிச்சை பெற்று, 17 பேர் மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினர். கொண்டம்பட்டியை சேர்ந்த சுவாமிநாதன், 48, என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோதவாடி ஊராட்சி நிர்வாகத்தினர், தேன்கூட்டை அழிக்க, கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X