வெளுத்து வாங்கப்போகுது மழை: விவசாயிகளே உஷாரா இருங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளுத்து வாங்கப்போகுது மழை: விவசாயிகளே 'உஷாரா' இருங்க!

Added : அக் 05, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இன்று முதல் மிக கனமழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், 5ம் தேதி (இன்று) முதல் வரும், 10ம் தேதி வரையில், மிக கனமழை பெய்யும். குறைந்தபட்சமாக, 8.8 மி.மீ., முதல் அதிகபட்சமாக, 43.4 மி.மீ., மழை பெய்யும்.குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இன்று முதல் மிக கனமழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், 5ம் தேதி (இன்று) முதல் வரும், 10ம் தேதி வரையில், மிக கனமழை பெய்யும். குறைந்தபட்சமாக, 8.8 மி.மீ., முதல் அதிகபட்சமாக, 43.4 மி.மீ., மழை பெய்யும்.குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, ஆனைமலை ஒன்றியம் முழுவதிலும் பரவலாக, கனமழை பெய்யும். அதிகபட்சமாக, 36 கி.மீ., வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும். மழையில்லாத நாட்களில் பகல் நேரங்களில் அதீத வெயில் நிலவும்.மழை காரணமாக பயிர்கள் அறுவடை, உரமிடுவது, பூச்சி மருந்துகள் தெளிப்பது மற்றும் நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். நெல் பயிர் பாதிப்பதை தவிர்க்க, உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.கரும்பு, வாழை மற்றும் மரப்பயிர்களுக்கு கட்டாயம் முட்டு கொடுக்க வேண்டும். தென்னை மர பாத்திகளின் ஆழத்தை அதிகப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கலாம். கால்நடைகளின் கொட்டகை அருகே மழைநீர் தேங்கி நிற்பதையும், தீவனங்கள் நனைவதையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X