ஊராட்சியில் முறைகேடு உறுப்பினர் திடீர் தர்ணா

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடலுார்: அக்கடவல்லி ஊராட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை தரையில் கொட்டி, ஊராட்சி உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி ஊராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி. இவர் கணவர் கோபாலகிருஷ்ணனுடன் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு வந்தார். அக்கடவல்லி ஊராட்சியில் பல்வேறு
 ஊராட்சியில் முறைகேடு உறுப்பினர் திடீர் தர்ணா


கடலுார்: அக்கடவல்லி ஊராட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை தரையில் கொட்டி, ஊராட்சி உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி ஊராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி. இவர் கணவர் கோபாலகிருஷ்ணனுடன் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு வந்தார். அக்கடவல்லி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்தார். பின், தான் கொண்டு வந்த மனுக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுத்த விளக்க கடிதங்களை தரையில் கொட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர் கூறுகையில்,'அக்கடவல்லி ஊராட்சியில் 2010 முதல் 2020-ம் ஆண்டு வரை கட்டடங்கள் கட்டாமலேயே கட்டியதாக அரசு நிதியில் இருந்து ரூ.5 கோடி வரை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். சாலை அமைக்கும் பணி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தானே வீடு கட்டும் திட்டம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிப்பறை கட்டும் திட்டம் உட்பட பல திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து முதல்வர், அமைச்சர், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, தெரிவித்தார். அதிகாரிகள் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X