மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முன்னதாக போதைபொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சிக்கி தற்போது நீதிமன்ற உத்தரவின் பெயரில் அக்டோபர் 7ஆம் தேதிவரை போலீசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் சுசானா கான் கருத்து தெரிவித்துள்ளார்.
தெற்கு மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக நடைபெற்ற ஆடம்பர மது விருந்தில் ஆர்யன் கலந்து கொண்டார். அப்போது நள்ளிரவுக்குமேல் திடீரென போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கப்பலில் சோதனை நடத்தியபோது பலவித போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக ஆர்யன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானுக்கு மருத்துவமனையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனக்கு ஜாமின் அளிக்குமாறு தனது வழக்கறிஞர் மூலமாக வாதாடிய ஆர்யனுக்கு நீதிபதிகள் ஜாமின் அளிக்க மறுத்தனர்.
பின்னர் அக்டோபர் 7ம் தேதிவரை அவர் காவலில் வைக்கப்பட உத்தரவிட்டனர். கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்கள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஷாருக்கானின் மனைவி கவுரி கானின் நெருங்கிய நண்பரான ஆடை வடிவமைப்பாளர் சுசானா கான் ஆர்யன் காரனுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், ஆர்யன் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் அவர் செய்த ஒரே தவறு என்றும் பாலிவுட் பிரபலங்களை சிலர் குறிவைத்து தாக்கி வருவதாகவும் அதன் விளைவாகவே தற்போது இந்த வழக்கில் ஆர்யன் கான் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்யன் ஓர் நல்ல குழந்தை என்று அவருக்கு நற்சான்றிதழும் வழங்கியுள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE