ஜனநாயகம் பற்றி பேச காங்., தலைவர்களுக்கு உரிமையில்லை: உமா பாரதி

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (15)
Advertisement
புதுடில்லி: பிரியங்காவும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லை என பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இதன்காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர்
Priyanka, Cong Leaders, Dont Have Right, Speak, Democracy, Farmers, Uma Bharti, BJP, பிரியங்கா, காங்கிரஸ், தலைவர்கள், ஜனநாயகம், விவசாயம், உரிமையில்லை, உமா பாரதி

புதுடில்லி: பிரியங்காவும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லை என பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இதன்காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா நேற்று (அக்.,04) கைது செய்யப்பட்டார்.


latest tamil news


இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரியங்கா, ‛எந்த உத்தரவும் எப்.ஐ. ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக உங்கள் அரசு (பிரதமர் மோடி) என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?' என்று பிரியங்கா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: பிரியங்காவும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும், இந்த விஷயம் குறித்து பேசுவதற்கு உரிமையில்லை. சுதந்திரத்துக்கு பின் விவசாயமும், விவசாயிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.


latest tamil news
மகாத்மா காந்தியின் கனவான நாட்டின் முக்கியப் பொருளாதாரமான வேளாண் தொழில், பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் அழிக்கப்பட்டது. நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையை இழந்துவிட்டது. 10 ஆயிரம் சீக்கியர்களை உயிரோடு எரித்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அஹிம்சையைப் பற்றிப் பேசுவது பொருத்தமானது அல்ல. காங்கிரஸ் கட்சியினர், தலைவர்கள் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி, வளர்த்துக் கொண்டு, மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு, விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
06-அக்-202101:47:32 IST Report Abuse
Arachi உதிர்ப்பிரேதேசம் ஒரு கான்செண்ட்ரேஷன் கேம்பாக மாறிக்கொண்டிருக்கிறதா
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202122:09:46 IST Report Abuse
தமிழவேல் எங்கேயாவது காரால் மோதி கொன்னுட்டான்னு எழுதி இருக்கா ? // உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இதன்காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். //
Rate this:
Cancel
Porampoku -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202122:03:31 IST Report Abuse
Porampoku who is the voice
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X