அயோத்யா: ஐந்தாம் ஆண்டு தீபோத்சவ் விளக்கேற்றும் விழா உ.பி.,யில் கொண்டாடப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு கின்னஸ் சாதனையை முறித்து புதிய சாதனை படைக்க யோகி அரசு திட்டமிட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராகப் பதவியேற்றதும் தீபோத்சவ் என்கிற அகல் விளக்கு ஏற்றும் பண்டிகை அயோத்தியா நகரில் கொண்டாடப்படுகிறது. இதன்படி விழா நாட்களில் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமான கொண்டாட்டம் நடைபெறும்.
![]()
|
7.5 லட்சம் அகல் விளக்குகள்
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக பயனடைந்த ஒன்பது லட்சம் குடிமக்கள் வரவிருக்கும் தீபாவளி நாளன்று 7.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உத்தரபிரதேச மாநிலத்தை ஒளிமயமாகக் கோரியுள்ளார்.
இதுவரை நான்கு ஆண்டுகள் தீபோத்சவ் விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது 5வது ஆண்டில் இந்த விழாவை மேலும் விமர்சையாக்க, குடிமக்கள் தங்கள் வீடுகளில் குறைந்த பட்சம் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு செய்தால் தீபாவளி நாளில் உத்தர பிரதேசத்தில் 18 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். மேல் கோணத்திலிருந்து இந்த விளக்குகளைப் பார்க்கும்போது கண்ணை கவரும். இந்த புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரல் ஆவதும் உண்டு.
கடந்த 2019ஆம் ஆண்டு தீபோத்சவ் விழாவின்போது அயோத்தியாவில் 4 லட்சத்து 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு 6 லட்சத்து 6 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அயோத்யா மாவட்டம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
![]()
|
தற்போது 2020ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்க யோகி ஆதித்யநாத் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்கப்பட உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement