சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக முதல்வர் ஸ்டாலின்: கடந்த சில ஆண்டுகளில், 'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் வழியே, அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது. எனவே, அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவை தெரிவிக்க

'டவுட்' தனபாலு

தமிழக முதல்வர் ஸ்டாலின்: கடந்த சில ஆண்டுகளில், 'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தும், மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இதில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் வழியே, அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது. எனவே, அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: 'நீட்' விவகாரத்தில், தமிழக அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும், அண்டை மாநிலமான கேரளாவில் கூட கேட்காது. ஏனெனில், ஐந்தாண்டுகளாக எவ்வித குழப்பமும் இன்றி நீட் நடக்கிறது; மருத்துவம் படிக்க மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலினின் இந்த கோரிக்கை, விழலுக்கு இறைத்த நீர் போலத் தான் ஆகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழக மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு வட்டியாக, 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் வாயிலாக, மின் வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்ய வேண்டும்.

டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை தவறாக புரிந்து, பா.ம.க., ராமதாசே சொல்லி விட்டார் என கருதி, கடனை சரிசெய்ய மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி விடுமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. கடன் இல்லாத அரசுகளோ, தனியார் நிறுவனங்களோ உலகில் கிடையாது. கடன் வாங்கினால் தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்!


பா.ஜ., தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி:
இந்தியாவில், தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க., அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

டவுட்' தனபாலு: தமிழக ஹிந்துக்கள் என்ன அடித்தாலும் தாங்குவர் என, தமிழக அரசு தவறாக நினைக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், தொடர்ந்து ஹிந்து பண்டிகைகள், புனித நாட்களில், கொரோனா பெயரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், பிற மாநிலங்களில் அதுபோல இல்லை. எனவே, தமிழக அரசின் செயல்பாட்டில் உள்ளர்த்தம் இருக்குமோ என்ற, 'டவுட்டும்' தமிழக மக்களுக்கு உள்ளது!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06-அக்-202119:53:00 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\ கடன் இல்லாத அரசுகளோ, தனியார் நிறுவனங்களோ உலகில் கிடையாது. கடன் வாங்கினால் தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்\\ ........கரெக்ட் ...... ஆனா தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கினால் தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிப்பணிகளுக்காக செலவிடும் (கிட்டத்தட்ட எல்லா நிறுவங்களும்), கழக அரசுகள் கடன் வாங்கினால், அந்த கடன் தங்களது குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் ...........
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-அக்-202115:14:25 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் வெற்றிக்காக ஒரு ஆவேச உறுதிமொழியாக நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்கிறார். இவர் வாக்குறுதியையும் யாரும் நம்பவில்லை, முந்தைய அரசின் 'கடித' நாடகத்தையும் யாரும் நம்பிக்கொண்டு கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை ஆண்டுதோறும் தேர்வு எழுதுவதும் கல்லூரிகளில் சேர்வதும் தானாகவே நடக்கிறது லட்சத்தில் ஒரு தற்கொலையை வைத்து எத்தனை காலம்தான் நாடகம் ஆடுவார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X