தகுதியில்லை!

Added : அக் 05, 2021
Share
Advertisement
தகுதியில்லை!விவசாயமே நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு என்ற காந்தியின் கோட்பாட்டை நேரு உடைத்தெறிந்தார். 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையை காங்., அமல்படுத்தியது. அதனால் விவசாயம், ஜனநாயகம், அகிம்சை குறித்து பேசுவதற்கு பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் யாருக்கும் தகுதியில்லை.உமா பாரதிமூத்த தலைவர், பா.ஜ.,சட்டவிரோதம்!காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கைது செய்து,
 தகுதியில்லை!

தகுதியில்லை!
விவசாயமே நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு என்ற காந்தியின் கோட்பாட்டை நேரு உடைத்தெறிந்தார். 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையை காங்., அமல்படுத்தியது. அதனால் விவசாயம், ஜனநாயகம், அகிம்சை குறித்து பேசுவதற்கு பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் யாருக்கும் தகுதியில்லை.

உமா பாரதி

மூத்த தலைவர், பா.ஜ.,

சட்டவிரோதம்!

காங்., பொதுச் செயலர் பிரியங்காவை கைது செய்து, 'கெஸ்ட் ஹவுசில்' காவலில் வைத்துள்ளது சட்டவிரோதமானது. இதில் இருந்தே, உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது தெளிவாகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விருப்பத்துக்கு ஏற்ப போலீசார் செயல்படுகின்றனர்.

சிதம்பரம்

மூத்த தலைவர், காங்.,

கொடூரமானது!

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்துள்ள சம்பவங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களைவிட கொடூரமானது. விவசாயிகளை, பா.ஜ.,வினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X