பொது செய்தி

தமிழ்நாடு

போராட்ட குணம் மறைந்து விட்டது!

Added : அக் 05, 2021
Share
Advertisement
போராட்ட குணம் மறைந்து விட்டது!சி. ரமேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முகலாயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் சிதைக்கப்பட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.மேலும், கோவில்களில் கடும் கட்டுபாடுகளுடன், சிறு கொண்டாட்டமும் இல்லாமல் கடவுளை தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.முகலாயர் மன்னர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த போதும்,


போராட்ட குணம் மறைந்து விட்டது!சி. ரமேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முகலாயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் சிதைக்கப்பட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மேலும், கோவில்களில் கடும் கட்டுபாடுகளுடன், சிறு கொண்டாட்டமும் இல்லாமல் கடவுளை தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
முகலாயர் மன்னர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த போதும், ஹிந்து தர்மத்தை காக்க பல்லாயிரம் பேர் தங்கள் இன்னுயிரை தந்தனர். ஆட்சியாளர்களின் கொடுமை தாங்காமல், பலர் அவர்களின் மதத்திற்கு மாறி தங்களை
காத்துக் கொண்டனர்.

ஆங்கிலேய ஆட்சியின் போதும், கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. ஹிந்து மத வழிபாட்டுக்கு பல்வேறு தடைகள் விதித்தனர். அவர்கள் சார்ந்த மதத்திற்கு மாறுவோருக்கு சலுகைகள் பல கொடுத்தனர்.
முகலாயரிடமும், ஆங்கிலேயரிடமும் பல ஒற்றுமைகள் இருந்தன.

* கோவில்களுக்கு மன்னர், மக்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வைர நகையை கொள்ளை அடிப்பது

* கோவிலின் தினசரி பூஜை மற்றும் சடங்குகளை நிறுத்துவது

* கடவுள் விக்ரகங்களை சேதப்படுத்துவது மற்றும் கடத்துவது

* கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வரி விதிப்பது

* மத மாற்றம் செய்வது

* கோவிலில் பூஜை செய்வதை தங்கள் வாழ்க்கையாக கொண்டோரை தண்டித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது...
இப்படி இன்னும் கொடுமைகளை, முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் ஹிந்துக்கள் அனுபவித்தனர்.
நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்... ஹிந்துக்கள் இப்போதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆங்கிலேயர், முகலாயர் கால ஆட்சி போலவே, இப்போதும் நடக்கிறது.
கோவில்கள் சிதைக்கப்படுகின்றன. செல்வம் கொள்ளை அடிக்கப்படுகின்றது. ஹிந்து மத வழிபாட்டிற்கு மட்டும்
இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்துவது தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணம் என்ற பெயரில் வரி விதிக்கப்படுகிறது.
இதோ இப்போது, கோவிலில் உள்ள நகையை அபகரிக்கப் போகின்றனர். தமிழகத்தில் ஹிந்து மதம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என தெரியவில்லை. ஏனெனில், ஹிந்துக்களிடம் போராட்ட குணம் மறைந்து விட்டது.
உணர்வும், வலிமையும் இல்லாத அனைத்தும் அழிந்து போகும் என்பதை, ஹிந்துக்கள் உணர வேண்டும்.


அனாத ரட்சகன் 'நீட்' தேர்வு!என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட் தேர்வு உயிரை பறிக்கும் ஆட்கொல்லி விஷம்; அதனால் அதை ஒழிக்க வேண்டும்' என்கிறார், 'அறிவுஜீவி'யான நடிகர் கமல்.
மஹாராஷ்டிர மாநிலத்தில், 'கோச்சிங்' நிறுவனம் ஒன்று, 50 லட்சம் ரூபாய் வசூலித்து, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது.
இப்படி, ஏகப்பட்ட குறைகள் உள்ள நீட் நிறுவனம் நடத்தும் தேர்வு தேவை தானா என, 'புத்திசாலி'கள் சிலர் கேட்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியோர் எல்லாம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்ற, 'கோல்மால்' வேலை நடந்ததே... அதை மறந்து விட்டனரா?
அப்படி தில்லுமுல்லு செய்து வேலைவாய்ப்பு பெற்றவர்களை, 'டிஸ்மிஸ்' செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டனரா என்ன? டி.என்.பி.எஸ்.சி., நிறுவனத்தில், 'ஊழல் பெருச்சாளி'கள் பெருகி விட்டனர் என்பதற்காக, அந்நிறுவனத்தை இழுத்து மூடி விட்டனரா என்ன?
'கிரிமினல்' குற்றவாளிகள் எல்லாம், எம்.எல்.ஏ., - எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனரே... அதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதால் தேர்தல் ஆணையமே வேண்டாம் என சொல்லும் துணிச்சல் யாருக்கும் வரவில்லையே... ஏன்?
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடி கட்டி பறப்பதை, லஞ்ச ஒழிப்பு துறையால் தடுத்து நிறுத்த முடிந்ததா என்ன?இப்படி, அத்தனை துறைகளும் நாறிப் போயிருக்கும் போது, நீட் தேர்வு மட்டும் வேண்டாம் என சொல்வோர், 'சுயநலக்காரர்கள்' என்று அடித்து சொல்லலாம்.
நீட் தேர்வில் சில இடங்களில் நடக்கும், 'தில்லாலங்கடி' வேலைகளை காரணம் காட்டி, அந்த தேர்வே வேண்டாம் என்று சொல்வது, மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்தும், 'அதி புத்திசாலி'யின் செயலாகும்!
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் நடத்தும் பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வந்த அனாத ரட்சகன் தான் நீட் தேர்வு என்பதை யாரும் மறுக்க
முடியாது.
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறது.சமீபத்தில், பாகிஸ்தானில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டித் தொடரை, பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது; இது, அந்நாட்டிற்கு பெரும் அவமானத்தை கொடுத்துள்ளது.கடந்த 2009ல், லாகூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இதன் பின், பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை.பாக்., பிரதமர் இம்ரான்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர். 1991ல், பாகிஸ்தானுக்காக உலகக் கோப்பை வென்று கொடுத்தவர். அவர் பிரதமரான பின், சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறார்.
ஆனால், பயங்கரவாதம் இருக்கும் வரை, அம்மண்ணில் யாரும் நுழைய அச்சப்படுவர். பாக்., பாதுகாப்பான நாடு என்ற நிலையை எட்ட, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பயங்கரவாத ஆதரவு என்ற நிலைபாட்டில் இருந்து, பாகிஸ்தான் மாற வேண்டும். அப்போது தான், உலகம் அந்நாட்டையும்
அரவணைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X