ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள்: விரைவில் நியமிக்க முடிவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரை செய்த 68 பேரில், சிலர் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுதும் செயல்படும் 25 உயர் நீதிமன்றங்களில், 1,098 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. கடந்த மாதம் 1ம் தேதி நிலவரப்படி, அவற்றில் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே, 12 உயர் நீதிமன்ற நீதிபதிகள்

புதுடில்லி:உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரை செய்த 68 பேரில், சிலர் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுதும் செயல்படும் 25 உயர் நீதிமன்றங்களில், 1,098 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. கடந்த மாதம் 1ம் தேதி நிலவரப்படி, அவற்றில் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே, 12 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காக 68 நபர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இதில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கள், மூன்றாம் முறையாக பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளது. இரண்டாம் முறையாக 10 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அனைவரும் புதியவர்கள்.

கொலீஜியம் பரிந்துரை செய்தவர்களில் சிலர் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக அடுத்த சில நாட்களில் நியமிக்கப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகள் நியமனம் ஒரே நேரத்தில் நடக்காது என்றும், சிறிது கால இடைவெளியில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X