ராகுல் மீது வழக்கு பாயுமா? 'டுவிட்டருக்கு நோட்டீஸ்!'

Updated : அக் 07, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' பகிர்ந்ததற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக 'டுவிட்டர்' நிறுவனத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சமூக வலைதளம்டில்லியில், ஜூலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
ராகுல் மீது வழக்கு பாயுமா? 'டுவிட்டருக்கு நோட்டீஸ்!'

புதுடில்லி:டில்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' பகிர்ந்ததற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக 'டுவிட்டர்' நிறுவனத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


சமூக வலைதளம்

டில்லியில், ஜூலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அந்த சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தை, ராகுல் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

''போக்சோ' சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்த சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றம். இது தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது.

இந்நிலையில், மகரந்த் சுரேஷ் மத்லேகர் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை டுவிட்டரில் ராகுல் பகிர்ந்தது, போக்சோ சட்டம் மற்றும் சிறுவர்களுக்கான நீதிச் சட்டம் ஆகியவற்றை மீறிய செயல். இந்த சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக ராகுல் பயன்படுத்தி உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


விசாரணை

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

முன்னதாக டுவிட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'ராகுல் பதிவிட்ட கருத்தும், புகைப்படமும் டுவிட்டர் நிறுவனத்தின் விதிகளை மீறியவை. அதனால் அவை நீக்கப்பட்டு விட்டன. ராகுலின் கணக்கும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது' என்றார்.இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
06-அக்-202115:49:10 IST Report Abuse
Anand இவனை சீக்கிரமா புடுச்சு இவன் கூட்டம் போற்றும் தாலிபான்களிடம் ஒப்படைத்து விடுங்கள்,....
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
06-அக்-202115:23:28 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் வழக்கு போட்டு எங்க இளவரசரை ஒண்ணுமே பண்ண முடியாது மைனர் சிறுமிதான் என்று இல்லை நாளைக்கு பிரியங்காவுக்கே ஏதாச்சும் ஏடா கூடமா ஆயிட்டா கூட இளவரசர் போட்டோ போடுவாரு அது மூலமா பிரதமர் ஆயிரமுடியுமா என்று கணக்கு போடுவாரு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-அக்-202112:36:52 IST Report Abuse
sankaseshan பச்சைப்பிள்ளை ,பட்டய்யாவை பற்றி எல்லாம் தெரிந்தவன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X