சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பெண் புரோக்கர் மூலம் வாரி சுருட்டும் தாசில்தார்!

Added : அக் 05, 2021
Share
Advertisement
பெண் புரோக்கர் மூலம் வாரி சுருட்டும் தாசில்தார்!''வசூல் வேட்டைக்கே தனியா ஆபீஸ் போட்டிருக்கா தெரியுமோ...'' எனக் கேட்டபடியே, பெஞ்சில் சங்கமித்தார் குப்பண்ணா.''யாருங்க அந்த கில்லாடி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை மாவட்டத்துல 'டாஸ்மாக்' கடைகள்ல வேலை பார்க்கற விற்பனையாளர்கள், உதவியாளர்களிடம், ஆளுங்கட்சி டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் வசூல்

டீ கடை பெஞ்ச்


பெண் புரோக்கர் மூலம் வாரி சுருட்டும் தாசில்தார்!


''வசூல் வேட்டைக்கே தனியா ஆபீஸ் போட்டிருக்கா தெரியுமோ...'' எனக் கேட்டபடியே, பெஞ்சில் சங்கமித்தார் குப்பண்ணா.

''யாருங்க அந்த கில்லாடி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரை மாவட்டத்துல 'டாஸ்மாக்' கடைகள்ல வேலை பார்க்கற விற்பனையாளர்கள், உதவியாளர்களிடம், ஆளுங்கட்சி டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் வசூல் வேட்டையில இறங்கிட்டா ஓய்...

''ஜனநெருக்கடி மிகுந்த, அதிகம் சரக்கு விற்பனை ஆகற டாஸ்மாக் கடைகள்ல, எக்ஸ்ட்ரா வருமானமும் அதிகமாகவே கிடைக்கும்... இதனால, அந்தக் கடைகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கி தரதா சொல்லி, 3 லட்சம் ரூபாய் வரை
வசூலிக்கறா ஓய்...

''இதுக்காகவே, நகரின் மைய பகுதியில, ஆபீஸ் திறந்து வச்சிருக்கா... டிரான்ஸ்பர், தண்டனை குறைப்புக்கு எல்லாம் டாஸ்மாக் ஊழியர்கள் இங்கே போனா, தனித்தனி 'ரேட்' நிர்ணயம் பண்ணி, காரியத்தை முடிச்சு குடுக்கறா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க.,வை கரைக்க ஆரம்பிச்சிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதியும், அவரது கணவரும், பா.ம.க., மாநில மாணவரணி துணை செயலருமான ராஜ்குமாரும், சமீபத்துல அமைச்சர் வேலு முன்னிலையில தி.மு.க.,வுல
சேர்ந்துட்டாங்க...

''இவங்களோட அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க.,வைச் சேர்ந்த 10 ஊராட்சித் தலைவர்களும் தி.மு.க.,வுல சேர்ந்திருக்காங்க... இந்த இணைப்பு விழாவை, குட்டி மாநாடு மாதிரியே நடத்தியிருக்காங்க...

''சென்னை அறிவாலயத்துல, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில இணைப்பு விழா நடத்தணும்னு எல்லாரும் கேட்டிருக்காங்க... அதுக்கு, 'இன்னும் நிறைய பேரை திரட்டுங்க... உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும், அறிவாலயத்துல இணைப்பு விழா நடத்தலாம்'னு வேலு தரப்புல
சொல்லியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''இருக்கிற ஒரு மாசத்துல முடிஞ்ச அளவுக்கு வாரிடணும்னு தீயா வேலை பார்க்காரு வே...'' என, கடைசி மேட்டருக்கு அடி போட்டார்,
அண்ணாச்சி.

''யாருப்பா அந்த அதிகாரி...'' என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.

''திருச்சி மாவட்டத்துல இருக்கிற ஒரு 'ரெகுலர்' தாசில்தாரை தான் சொல்றேன்... ரெகுலர் தாசில்தார் பதவி, ஒரு வருஷம் தான் தருவாவ வே... இந்த தாசில்தார் வந்த 11 மாசத்துல கொரோனா கெடுபிடிகளால பெரிய அளவுல சம்பாதிக்க முடியலையாம்...

''இன்னும் ஒரு மாசத்துல, அவரது பதவிக்காலம் முடியுது... அதுக்குள்ள, 'செல்வம்' சேர்த்துடணும்னு கணக்கு போட்டு, வில்லங்க நிலப் பிரச்னைகளை எல்லாம் விறுவிறுன்னு பைசல் பண்ணுதாரு வே... இதுக்குன்னே, பெண் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருத்தரை கைக்குள்ள வச்சிருக்காரு...

''அந்தம்மாவை பார்த்து, கொடுக்க வேண்டியதை குடுத்துட்டா, தாசில்தார் காரியத்தை கச்சிதமா முடிச்சு குடுத்துடுவாரு... அந்த பெண் புரோக்கரே, தினமும் சில ஆயிரங்கள் சம்பாதிக்கிறாங்கன்னா, தாசில்தாருக்கு எவ்வளவு கிடைக்கும்னு கணக்கு போட்டுக்குங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''இந்திராகாந்தி கொண்டாந்த மிசா மாதிரி கடுமையான ஒரு சட்டம் வந்தா தான், இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் திருந்துவாங்க பா...'' என்றபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X