சிராக், பசுபதி குமாருக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு

Added : அக் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி:பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் மற்றும் பசுபதி குமார் பராஸ் இடையே நிலவும் பிரச்னை காரணமாக, இடைத்தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினருக்கும், புதிய கட்சி பெயர் மற்றும் சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இடைத்தேர்தல்பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை துவக்கிய ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு

புதுடில்லி:பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் மற்றும் பசுபதி குமார் பராஸ் இடையே நிலவும் பிரச்னை காரணமாக, இடைத்தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினருக்கும், புதிய கட்சி பெயர் மற்றும் சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இடைத்தேர்தல்

பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை துவக்கிய ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.இதையடுத்து ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சி தலைவரானார். இவர் எம்.பி.,யாக இருக்கும் நிலையில், கட்சியின் பிற எம்.பி.,க்கள், ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரும், சிராக் பாஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதி குமார் பரசை, பார்லிமென்ட் குழு தலைவராக தேர்வு செய்தனர்.

இதனால், பசுபதி குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. இது அவருக்கும், சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதலை உருவாக்கியது. இதற்கிடையே, பீஹாரில் காலியான இரு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 30ம் தேதி நடக்க உள்ளது. இதில், லோக் ஜனசக்தி கட்சியின் பங்களா சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட சிராக் பாஸ்வான், அதனை எதிர்தரப்புக்கு வழங்கக் கூடாது என்றார்.இதனால், சின்னம் மற்றும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் சமீபத்தில் முடக்கியது.


நடவடிக்கை

இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினருக்குமான இடைக்கால நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.இதன்படி, சிராக் பாஸ்வான் தரப்பிற்கு லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் என்ற கட்சி பெயருடன் ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.பசுபதி குமாருக்கு ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி என்ற பெயருடன் தையல் இயந்திரம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X