பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 05, 2021
Share
Advertisement
அக்., 6, 1935கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில், 1935 அக்., 6ம் தேதி பிறந்தவர் புலமைப்பித்தன்; இயற்பெயர், ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே, தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்...' என்ற பாடல் வழியாக, திரையுலகில் நுழைந்தார். எம்.ஜி.ஆர்., முதல் வடிவேலு

இதே நாளில் அன்று


அக்., 6, 1935



கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில், 1935 அக்., 6ம் தேதி பிறந்தவர் புலமைப்பித்தன்; இயற்பெயர், ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே, தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்...' என்ற பாடல் வழியாக, திரையுலகில் நுழைந்தார். எம்.ஜி.ஆர்., முதல் வடிவேலு வரை அனைத்து நடிகர்களுக்கும் 320-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ளார். 'நீங்க நல்லா இருக்கணும், கல்யாணத் தேனிலா, சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, உச்சி வகிடெடுத்து, எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில், ஆடி வா பாடி வா...' உட்பட, 700-க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியில், தமிழக மேலவை துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த செப்., 8ம் தேதி தன், 85வது வயதில் காலமானார். கவிஞர் புலமைப்பித்தன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X