பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்....:இந்தியா

Added : அக் 05, 2021
Share
Advertisement
வெடி விபத்து: பலி உயர்வுமுசாபர் நகர்: உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தின் கைரானா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் மீரட் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.ராகுல் தொகுதி பிரமுகர் ராஜினாமாகல்பேட்டா: கேரள காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பலரும்

வெடி விபத்து: பலி உயர்வு

முசாபர் நகர்: உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தின் கைரானா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் மீரட் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

ராகுல் தொகுதி பிரமுகர் ராஜினாமா

கல்பேட்டா: கேரள காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். காங்., முன்னாள் தலைவர் ராகுலின் வயநாடு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி. பாலசந்திரன் நேற்று கட்சியில் இருந்து விலகினார்.

டில்லியில் ராம்லீலா விழா

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டில் டில்லி ராம்லீலா விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 6 - 16ம் தேதி வரை நடக்கும் விழாவில், உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ., - எம்.எல்.ஏ., ஓட்டம்?

கோல்கட்டா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வான ஆஷிஷ் தாஸ், திரிணமுல் காங்.,கில் இணைய உள்ளார். கோல்கட்டாவில், திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியை அவர் சந்தித்தார்.

போதை பொருள்: மேலும் இருவர் கைது

மும்பை: மும்பை கடற்பகுதியில் போதைப் பொருள் 'பார்ட்டி' நடத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

புத்தக மோசடி: ஒருவர் கைது

புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் பள்ளி பாடப் புத்தகங்களை கள்ளத்தனமாக அச்சடித்து விற்றவர், டில்லியின் ஷாதராவில் கைது செய்யப்பட்டார். கொரோனாவால் வேலை இல்லாததால், கள்ளத்தனமாக இந்த பாடப் புத்தகங்களை அச்சடித்து விற்று வந்ததாக அவர் விசாரணையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X